இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதியார் பாட்டின்பம்
251
என்பது இனிது விளங்குவதாகும். இதனாலேயே, கலை நலமறியாது வருந்தும் எளியவர்க்கு எழுத்தறிவிக்கும் அறம், ஏனைய அறங்களினும் நூறாயிரம் மடங்கு மேலான தென்று பாரதியார் அறிவித்தார். இத்தகைய கல்விச் சாலைகளை நாடெங்கும் நாட்டுதலே கலைமகளின் திருவுள்ளத்தை மகிழ்விக்கும் உயரிய வழிபாடாகும். கல்லூரிகளிற் போந்து எண்ணும் எழுத்தும் பயிலும் மாணவர் கண்ணெதிரே, கலைமகளின் வீணையும் கையும் விரிந்த முகமலரும் விளங்கித் தோன்றும்.