பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தமிழ் இன்பம்


பரவுதல் வேண்டும். 'தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவற்கொரு குண முண்டு' என்று பாடினார் ஒரு புலவர். அவர் பாடிய தமிழ்ப் பண்பு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பரக்கப் பேசப்படுகின்றது. ஆதலால், தமிழிலக்கியம் தமிழினத்தார்க்குத் தனிப் பெருஞ் செல்வம். அச்செல்வத்தை நாமும் துய்த்துப் பிறர்க்கும் வழங்குதலே இம் மாநாட்டின் நோக்கமாகும். இந்நோக்கம் நிறைவேறுமாறு தமிழ்ப் பெருந்தெய்வம் திருவருள் புரிக. 'செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்' என்னும் உண்மையை உணர்ந்து, இம்மா நாட்டில் நிகழும் சொல் விருந்தை நுகர்வதற்குப் பல்லாயிரக் கணக்காகக் குழுமியுள்ள மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம் உரியதாகுக.