பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தமிழ் இன்பம்


மன்னனுக்கும் முனிவருக்கும் இசைப்போட்டி நிகழ்ந்தது. முதலில் அரக்கர்கோன் அருமையாகப் பாடினான். அதன்பின் அகத்தியர் தமிழிசையை யாழில் அமைத்துப் பாடினார். அவர் பாட்டொலி கேட்ட பறவைகளும் விலங்குகளும் பரவசமுற்றன. எதிரே நின்ற கரும்பாறை இளகிற்று. அரக்கர் கோன் உள்ளம் உருகிற்று. அந்நிலையில் அகத்தியரை நோக்கி, 'என் உயிரினும் இனிய இசை ஞானியே! உமக்கு என்ன வேண்டும்?' என்றான் இராவணன். தமிழ் நாட்டைப் பாதுகாப்பதற்கு ஏற்ற சமயம் வந்துற்றது என்று அறிந்த முனிவர், 'ஐயனே! இந்நாட்டிலுள்ளார் எவரையும் நீ துன்புறத்தாமல் இருக்க வேண்டும்' என்றார். அதற்கிசைந்த இராவணனும் பொதியமலையை விட்டகன்றான். அன்று முதல் தமிழகத்தில் ஆட்சி செலுத்தும் கருத்தை அடியோடு விட்டொழித்தான் அரக்கர் கோமான். 'தமிழிசையின் வெற்றியால் அரக்கர் அச்சம் அகன்றது' என்று தமிழ் மக்கள் அகங்களித்தார்கள். இச்செய்தியைத்[1] தொல்காப்பியப் பாயிர வுரையாலும் மதுரைக் காஞ்சியுரையாலும் அறியலாம். இவ்வரலாற்றால் தமிழ் நாட்டை முன்னாளில் அபயமளித்துக் காத்தது இசைத் தமிழே என்பது இனிது விளங்கும். 

இவ்வாறு தமிழ்நாட்டைப்பாதுகாத்த இசைத் தமிழ், கடல் கடந்து இலங்கைக்குச் சென்று வெற்றி பெற்ற


  1. பொதியின்கண் இருந்து இராவணனைக் காந்தரு வத்தால் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கினார் தமிழ் முனிவர் என்பது தொல்காப்பியப்பாயிர உரை.