இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. பொங்கலோ பொங்கல்[1]
தமிழ் நாட்டிலே பல சாதிகள் உண்டு; பல சமயங்கள் உண்டு. ஆயினும், தமிழர் அனைவருக்கும் பொங்கல் நாள் ஒரு புனித நாள். அந்த நாளில், வீடு' தோறும் சுதையின் விளக்கம்; வீதிதோறும் மங்கல முழக்கம்; 'பொங்கலோ பொங்கல் என்பதே எங்கும் பேச்சு.
பொங்கல் விழா நடைபெறும் காலமும் இனியகாலம்; கார் உலாவும் வானமும், நீர் உலாவும் ஏரியும் கருணை காட்டும் காலம்; இயற்கை அன்னை பசுமையான புடைவை உடுத்து, பன்னிறப் பூக்களைச் சூடி, இனிய காயும், கனியும் கரும்பும் அணிந்து இன்பக் காட்சி தருங்காலம்.
பொங்கலுக்குத் தலைநாள் போகி பண்டிகை. அதைக் கொண்டாடும் கருத்தென்ன? போகி என்பவன்
- ↑ சென்னை, பாரததேவரியின் பொங்கல் மலரில் எழுதியது.