பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவிய இன்பம்

83


விரிந்து கிடக்க, சிலம்பைக் கையிலேந்திக் கொற்றவன் முன்னே போந்த கண்ணகியின் கோலத்தை,

"மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணிரும்”

என்று சிலப்பதிகாரம் உருக்கமாக உரைக்கின்றது. கண்ணீர் உகுத்துநின்ற கண்ணகியைப் பாண்டியன் குழைந்து நோக்கி, 'மனம் வருந்தி வந்த மாதே! நீ யார்?' என்று வினவினான். அதற்கு மாற்ற முரைக்கப் போந்த மங்கை, “அரசனே கன்றை இழந்த பசு ஒன்று மனங் கரைந்து கண்ணிர் வடிக்கக் கண்டு, அவ் ஆன்கன்றைக் கொன்ற தன் அருமந்த மைந்தன் மீது தானே தேராழி ஊர்ந்து முறைசெய்த சோழ மன்னனது புகழமைந்த புகார் நகரமே என் பதியாகும். அந்நகரில் மாசாத்துவானுக்கு மகனாய்த் தோன்றி, ஊழ்வினைப் பயனால் உன் நகரிற் புகுந்து, என் சிலம்பை விற்கப் போந்த வீதியில் உன் ஆணையால் கொலையுண்டிறந்த கோவலன் மனைவியே யான்” என்று கொதித்துக் கூறினாள். அப்பொழுது அரசன் “மாதே! கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோலன்று. அது நீதியின் நெறியே யாகும்” என்று நேர்மையாய் உரைத்தான்.

கோவலன் குற்றமற்றவனென்றும், அவனைக் குற்றவாளி என்று கொன்ற கொற்றவன் தவறிழைத்தான் என்றும் ஐயந்திரிபற விளக்க வந்த கண்ணகி காவலனை நோக்கி, “அரசே! என் கணவன் கள்வனல்லன்; அவனிடம் இருந்த சிலம்பு அரண்மனைச் சிலம்பன்று. அதன் இணைச் சிலம்பு