பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பெயர்ச் சிறப்பு

நமது தாய்மொழியின் பெயர் 'தமிழ் என்பது. தமிழை "உயர்தனிச் செம்மொழி என்டர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள்.

'தமிழ் என்பதற்கு 'அழகு எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் 'தமிழ் தழுவிய சாயல்' என்பதால் நன்கறியலாம்.

தமிழுக்கு 'இனிமை' எனவும் பொருள் உண்டு. இதை தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும்.

தமிழ் என்பதை தம்-இ எனப் பிரித்து தம்மிடத்தில்"ழ்"ழை உடையது தமிழ் எனப் பொருள் கூறுவதும் உண்டு.

தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஒரு எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்' வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற் குரியது. த.வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.

தமிழுக்கு "முத்தமிழ் எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும். இசைத் தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும். நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும்.