பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. இலக்கியச் சிறப்பு

இலக்கியம் என்றால் என்ன?

இலக்கு என்பது குறி. இலக்கியம் என்றால் குறிக்கோளுடையது என்பது பொருள். இதை "இலட்சியம்' என வட நூலாரும் கூறுவர். தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்பு தனிச்சிறப்புவாய்ந்தது. காரணம், சாகா இலக்கியங்கள் பல அதில் இருந்துவருவதே.

எது சிறந்த இலக்கியம்?

பல்லாண்டுகளுக்கு முன்பு, எது சிறந்த இலக்கியம்? என்ற கேள்வி மேலை நாட்டிலிருந்து கிளம்பியது. இக் கேள்விக்கு பிரஞ்சுப் பேராசிரியர் ஒருவர், “நாட்டை மொழியை, மக்களை முன்னே வைத்துச் செய்யப்பெறும் இலக்கியங்களே தலைசிறந்த இலக்கியங்கள் என விடை கூறினார். ஆம், அரசியலை, சமயத்தை, தனிமனிதனை முன் வைத்துச் செய்யப்பெற்ற இலக்கியங்கள் அனைத்தும் அழிந்து போயின; அழிந்தும் வருகின்றன. -

இலக்கியப் பிரிவுகள்

தமிழைப்போலவே இலக்கியங்களின் பிரிவும் மூவகைப்படும்.

அவை கவிதை இலக்கியம், உரைநடை இலக்கியம், பேச்சு இலக்கியம் எனப் பெறும். -