பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணச் சிறப்பு D- 133

இடைச் சொற்களினின்றும் உரிச்சொற்களினின்றும் பெயர்ப் பகுபதங்களும், வினைப் பகுபதங்களும் பிறக்குமென்பது,

பொதுவியல்

வழக்கு, வெளிப்படை, குறிப்பு ஆகுபெயர், வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி, இடைப் பிறவரல், திணை, பால் முதலிய எழும் மயங்கிவரின் வழுவாமென்பது திணை, பால் வழுவமைதிகள், இட வழுவமைதி, காலவழுவமைதி, அறுவகை வினா, மரபு, ஒரு பொருட் பன்மொழி. -

சொற்றொடரியல்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்கள்.

புணரியல்

உயிரீற்றின்பின் உயிர் புணர்தல்; குற்றியலுகரத்திற்குப் பின் உயிர் புணர்தல் சில முற்றிலுக்கரத்திற்குப் பின் உயிர் புணர்தல்: குற்றியலுகரத்தின் பின்னும் முற்றியலுகரத்தின் பின்னும் யகரம் புணர்தல் மெய்யீற்றின் பின் உயிர் புணர்தல்; உயிரீற்றின் பின்னும் மெய்யீற்றின் பின்னும் வல்லினம் புணர்தல்,உயிரீற்றின் பின்னும் மெய்யீற்றின் பின்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்; உயர்தினைப் பெயர் பொதுப் பெயர்களின் பின் வல்லினம் புணர்தல் அஃறிணைப்பெயரின் பின் வல்லினம் புணர்த்ல், விளிப் பெயரின் பின்வல்லினம் புணர்தல், குற்றியலுகரப்புணர்ச்சி, ணகர னகர ஈற்றுப் புணர்ச்சி, லகரளகர ஈற்றுப் புணர்ச்சி வகர மகர ஈற்றுப் புணர்ச்சி எண்ணுப் பெயர்ப் புணர்ச்சிதிசைப் பெயர்ப்புணர்ச்சி, வடமொழிப் புணர்ச்சி என்பன.

மேலே குறிப்பிட்ட அவற்றில்