பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ( தமிழின் சிறப்)

முதலியவைகளின் இலைகள் "புல்'லாகி விடும். நெல், வரகு முதலியவற்றின் இலைகள் "தாள்' என்றாகும்.

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "இலை அல்ல. அவற்றின் பெயர் 'தழை சப்பாத்தி, கள்ளி தாழை இனங்களின் இலைகள் இலையாகா, அவற்றின் பெயர் 'மடல்' கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் இலையாகா, அவற்றின் பெயர் "தோகை". தென்னை, பனை, ஈந்து, கமுகு முதலியவைகளின் இலைகள் இலையெனப்பெயர்பெறா. அவற்றின் பெயர். 'ஒலை" என்னே தமிழின் சொல்வளம்!

இவையனைத்திற்கும், "லிப் என்ற ஆங்கிலச் சொல்லோ, 'பத்திரம்' என்ற வடமொழிச் சொல்லோ பொருந்துமா? எனப் பாருங்கள். அப்பொழுதுதான் தமிழ்மொழியின் சொல்வளம் நன்கு விளங்கும். . -

அரிசியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் "ரைஸ் என்பது, சோற்றைக் குறிக்கும் சொல்லும் "ரைஸ்"தான். இது ஆங்கில மொழியின் சொற்பஞ்சத்தையே காட்டுகிறது. இதனால், சோறு கேட்பவர்களுக்கு அரிசியும், அரிசி கேட்பவர்களுக்குச் சோறு கிடைத்து விடலாம்.

தமிழில் பல பொருள் குறிக்கும் ஒரு சொல் என்பதும் உண்டு. அவற்றுள் 'மா' ត្រៃបព្វៈ ஒருசொல் அது.அழகு, அளவு அறிவு, ஆணி, இடித்தமா, இடை, கட்டு, கறுப்பு, மாமரம், குதிரை, சீலை, செல்வம், தாய், நிறம், பரி, பெருமை, மேன்மை, வண்டு, வயல், வலி, விலங்கு முதலியவற்றைக் குறிக்கும்.

அடுத்து, தமிழில் ஒருபொருள் குறிக்கும் பல சொல் என்பதும் உண்டு. அவற்றுள் வேழம், கயிறு, கரி, கைம்மா, நடைமலை,