பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 — தமிழின் சிறப்பு)

ஆங்கிலத்தில் எதுகை கடைசி எழுத்தாக மட்டுமே அமையும். இந்தியில் சிறந்த இலக்கியக் கவிதைகள் தோன்றாமைக்குக் காரணமும் இதுவேயாகும். -

'தன் கணவன் கொலையுண்டான் எனக் கேள்விப்பட்ட கண்ணகி, தெருவிலுள்ள புழுதியெல்லாம் தன் மேனியில் பட உடல் பதைபதைத்து, மன்னன் அரண் மனையை நோக்கி ஓடினான். அவளது கூந்தல் அவிழ்ந் தல்ைந்தது. மற்றொரு சிலம்பையும் கையோடுகொண்டுபோனாள். கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. அவளது கணவன் அவளை விட்டுப்போய்விட்டதுபோல் அவளது உடம்பைவிட்டு அவளது ஆவியும் குடிபோனது போன்று தோன்றியது. இவற்றைப் பாண்டிய மன்னன் அரசிருக்கையில் இருந்து கண்டான். கண்ட உடனேயே அவளது தோற்றத்திலிருந்து தனது ஆட்சியில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது எனக்கலங்கிவிட்டான்.தேராமன்னா என அவள் அழைத்து உண்மையை விளக்கியதை அவன் தன் காதுகளில் கேட்டான். கேட்ட அளவிலேயே உயிரையும் விட்டு விட்டான்" என்பது சிலப்பதிகாரத்திலுள்ள ஓர் அரசவைக் காட்சி. மேலே உள்ள காட்சியை விளக்கி எழுதப்பெற்ற சொற்றொடர்களின் எழுத்துக்களை எண்ணிப் பாருங்கள் 320 எழுத்துக்கள். இவற்றை 74 எழுத்துக்களாகச் சுருக்கிப் பொருள் கெடாமல் கட்டப்பெற்ற கவிதையே இது: ... "

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற் றணிச்சிலம்பும் கண்ணிரும்-வையைக்கோன் கண்டளவே தோற்றான் அக்காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர்.