பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j

'சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது. (பக்கம் 72)

'தமிழர் திணைநிலம் ஐந்து எனக் கண்டு 3000 ஆண்டுகளுக்கு மேலாயின. இன்னும் ஆறாவது நிலப்பரப்பை எவராலும் காண முடியவில்லை. (பக்கம் 80)

மொகஞ்சதரோவில் அகழ்ந்து எடுக்கப்பெற்ற இசைக் கருவிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்னைய தமிழிசைக் கருவிகள் (பக்கம் 83). இவ்வாறு பிறக்கும் இசையின் (இராக வகையின்) எண்ணிக்கை 11991 ஆகும். இதற்கு எடுத்துக் காட்டாக உள்ள நூற்பாவும் சிதைந்து காணப்படுகிறது. (பக்கம் 89)

சிலப்பதிகாரத்தில் மெய்யிற்பொடியும் எனத் தொடங்கி 'உயிர் என முடியும் வெண்பாவிற்கு முத்தமிழ்க் காவலர் தரும் உரைவிளக்கம் முத்தமிழ் உரைவிளக்கமாகவே அமைகிறது. அதன் ஏழு நயங்கள், ஐந்து கருப்பொருள்கள், வாசகர்கள் வாசித்தே நுகர்வதற்குரியன. அதில் உயிர் பறிகொடுத்த மெய்யாக வந்த கண்ணகி, அரசியையும், அரசனையும் உயிரற்ற உடலாக்கிக் கூறும் பாட்டு என இம் முதலும் முடிவும் சுட்டுகிறது என்று அவர் குறிப்பிடும் எட்டாவது நயம். ஆறாவது கருத்துப்பொருள் அழகிது! அழகிது! அழகிது (பக்கம் 57)

அழியாத தமிழ் ஏடுகளின் அழிவிலா அழகு வருணிக்கு முன், இவை தமிழர் செல்வத்தில் அழியாது எஞ்சிய சிலவே என்று காட்ட அழிந்த தமிழ் ஏடுகள், அழிந்த சித்த மருத்துவ ஏடுகள், அழிந்த இசை நாடகச் செல்வங்கள் ஆகியவற்றின் பட்டியல் கூறும் நயத்தை ஒரு முத்தமிழ்க் காவலரிடமின்றி வேறு யாரிடம் நாம் எதிர்பார்க்க முடியும்?

25-3-1969 கா. அப்பாத்துரை