பக்கம்:தமிழின் வெற்றி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்ே காயில் 97.

மான் மேல் நூறு செய்யுட்கள் அடங்கிய கலம்பகம் ஒன்றைப் பாடி முடித்தார். அந்தக் கலம்பகத்தில், வேதம் மொழி' என்ற பாட்டை இரண்டாவதாக அமைத்தார்.

கலம்பகம் கிறைவேறியவுடன் அதை அரங் கேற்றினர். மிக இனிய பாடல்கள் அடங்கிய அக் கலம்பகத்தைச் சைவர்களும் தமிழன்பர்களும் கேட்டு மகிழ்ந்து பாராட்டினர்கள்.

அரங்கேற்றத்துக்குப் பின் சில நாட்களில் ஜினேந்திரனுடைய திருக் கோயில் கட்டி கிறை வேறியது. கும்பாபிஷேகம் சிறப்பாக நடை பெற்றது. தொல்காப்பியத் தேவரை, எங்கள் பெருமானுக்கு ஒர் அழகிய செஞ்சொற் கோயில் கட்டி அளித்தார் ” என்று சைவர்கள் கொண்டாடி ர்ைகள். ' எங்கள் பெருமானுக்கு ஒர் அழகிய செங்கற் கோயில் கட்டி அளித்தார் ” என்று ஜைனர்கள் பாராட்டினர்கள்.