பக்கம்:தமிழின் வெற்றி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5% தமிழின் வெற்றி

காட்டுப் புலவரை அன்புடன் வரவேற்று உபசரித் தனர். புலவர்கள் மனங்கலந்து வாழும் இடம் மதுரை. அங்குள்ள புலவர்களிடம் பொருமை சிறி தும் இல்லை; பெருந்தன்மையே உருவாக இருப்பவர் கள் அவர்கள், ஆகவே சோழநாட்டிலிருந்து ஒரு புல வர் வந்திருக்கிருர் என்ருல் அவர்களுக்கு உவகை உண்டாவது இயல்புதானே? சோழ நாட்டுச் செய்தி களே யெல்லாம் விசாரித்து அறிந்து கொண்டார்கள். சோழ நாட்டுப் புலவர் பேசும்போதே அவர் பேச்சில் அகங்காரம் குமிழியிட்டது. பாண்டியன் அவைக்களப் புலவர்கள் அதைக் கவனித்தனர். சோழ நாட்டுப் புலவர், தாம் பல இடங்களுக்கும் சென்று கவிதை பாடிப் பிற புலவர்களே அடக்கி வென்று வந்த பிரதாபங்களே அடுக்கிக்கொண்டே போனுர், சோழ நாட்டின் சிறப்புகளைச் சொல்ல மறந்தார்; சோழனைப் பற்றிப் பேச மறந்தார். தம் முடைய புகழையே கொட்டி அளந்தார்.

மதுரைப் புலவர்களில் தலைவராகிய ஒருவருக்கு இவரை எப்படியாவது தலைகுனியச் செய்ய வேண்டு மென்ற எண்ணம் தோன்றியது. படித்தவம்ை ! தமிழ்ப் புலவனம் சிறிதாவது பணிவு இருக்கிறதா? தமிழின் எல்லையைக் கண்டவர் யார் ? இவன் அகத் தியரின் அவதாரமாகத் கன்னே கினைத்துக்கொண்டு பேசுகிருனே !! என்று அவர்பால் அவமதிப்பே உண்டாயிற்று. . - - அதெல்லாம் சரி, புலவரே! நாம் இப்போது ஏதாவது பாடல் சொல்லலாமே. உங்கள் சோழ மன்னனுடைய புகழை வைத்து ஒரு பாட்டுப் பாடுங் கள்' என்ருர் புலவர் தலைவர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/60&oldid=574825" இலிருந்து மீள்விக்கப்பட்டது