பக்கம்:தமிழின் வெற்றி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருக்கழிந்த புலவர் 55

சோழநாட்டுப் புலவர் தக்க சமயம் வாய்த்த தென்று கருதிப் பாடலைச் சொல்ல ஆரம்பித்தார். சோழனுடைய வீரத்தைக் தெரிவிக்கும் பாடலாக ஒரு வெண்பாவைச் சொல்லலானர். 'சோழன் மகா வீரன். போரில் புறங்கொடாது வெல்பவன். ஆகவே அவன் கவசம் அணியும்போது முதுகுக்குக் கவசம் அணிவதில்லை. யாருக்கும் முதுகு காட்டாத நிலையில் அதற்குப் பாதுகாப்பு எதற்கு ?’ பாட்டின் முதல் இரண்டடியைச் சொன்னர் புலவர்.

வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்

என்றும் முதுகுக் கிடான்கவசம்,

பின் இரண்டடியிலே இதற்குரிய காரணத் தைச் சொல்லலாம் என்று கினைத்திருந்தார். இரண் டடியைச் சொன்னவுடன் மதுரைப் புலவர் தலைவர் கைகாட்டினர். 'புலவரே நிறுத்துங்கள்! இந்த வெண்பா யாருடைய புகழைச் சொல்வது?’ என்று. கேட்டார். - - . . . . . . . . . . .

  • ஏன், இது கூடத் தெரியவில்லையா? எங்கள் சோழ மன்னனது புகழைத்தான் சொல்கிறது. அவன் புறமுதுகு காட்டாத பெரிய வீரன் என்பதை விளக்குகிறது" என்ருர் சோழநாட்டார்.

இந்த இரண்டடியில் அப்படி இல்லையே! உங்கள் சோழன் முதுகுக்குக் கவசம் இடுவதில்லை என்பதுதானே இருக்கிறது ?" என்று கேட்டார் புலவர் தலைவர். -

ஆம்; அதற்குக் காரணம் அவன் புறமுதுகு காட்டாக வீரம் அன்ருே இந்த இரண்டடி . யிலிருந்தே அதை ஊகித்துக் கொள்ளலாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/61&oldid=574826" இலிருந்து மீள்விக்கப்பட்டது