பக்கம்:தமிழின் வெற்றி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தமிழின் வெற்றி

அடுத்தபடி வளவனுடைய வீரத்தைப் பாராட்டி மற்ருெரு புலவர் ஒரு பாடல் பாடினர். பகைவர் களுக்கு அஞ்சாமல் அவர்களுடைய காட்டுக்குச் சென்று பொருது அவர்களைப் பணிய வைத்து அவர்கள் இட்ட திறைகளைக் கொண்டு வந்ததையும், அவ்வாறு பணியாக மன்னர்களைப் பொருது அழித் ததையும், புறங்காட்டினவர் அஞ்சினவர் முதலி யவர்களைக் கொல்லாமல் விட்டதையும் பாடினர் அவர். பின்னும் ஒரு புலவர் அவன் செய்த போர் களை வருணித்தார். அவையில் இருந்த படைத் தலைவரும் பிறரும் அரசனுடைய வீரப் புகழைப் பாடும். அந்தப் பாடல்களை மிகுதியாகச் சுவைத்து இன்புற்றனர். கிள்ளிவளவனுக்கு அவற்றைக் கேட்டபோது தோள்கள் பூசித்தன. . ,

சோழனுடைய கொடையையும் வீரத்தையும் பாராட்டிய பிறகு வேறு சிறப்பாகச் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது? ஆலுைம் மற் ருெரு புலவர் புது வகையில் ஒரு பாடலைச் சொன் னர். அதில் கிள்ளிவளவன் குடிமக்களுடைய முறை பீட்டைக் கேட்டு கியாயம் வழங்கும் திறத்தை எடுத் துரைத்தார். சான்றேர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்களுடைய நல்லுரைகளைக் கேட்டுத் தானும் ஆராய்ந்து குற்றம் யாருடைய தென்பதைத் திர்மானித்துக் குற்றவாளிக்குத் தண்டனையும், துன் புற்றவர்களுக்குக் குறைதீரும் வகையில் ஆறுதலும் பொருளும் அளிக்கும் இயல்பை விரித்துரைத்தார். அறங்கூரவையம் என்ற கியாய சபையில் மக்களின் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் உரிய சான்ருேர்களே நியமித்திருத்தலே அவர் தம் பாடலில் எடுத்து இயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/8&oldid=574772" இலிருந்து மீள்விக்கப்பட்டது