பக்கம்:தமிழின் வெற்றி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கோயில் $3

"ஏன்? உங்கள் வீட்டில் ஏதாவது திருட்டுப் போய்விட்டதா?’ என்று ஆலய அதிகாரி கேட்டார். 'என் வீட்டில் திருட்டுப் போனல் உங்களிடம் ஏன் வந்து சொல்கிறேன்? உங்கள் வீட்டில்தான் திருட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது' என்ருர் கோள் சொல்லும் கோமான். -

என்ன ஐயா உளறுகிறீர்? என் வீட்டில் எனக்குத் தெரியாமல் திருட்டுப் போகிறதாவது'

'உங்கள் வீடு என்ருல், நீங்கள் குடியிருக்கும் வீடு என்று எண்ணிக் கொண்டு பேசுகிறீர்கள். உங்கள் பொறுப்பில் இருக்கும் இடங்களெல்லாம் உங்கள் வீட்டைப் போன்றவை என்று நீங்கள் நினைக்க வேண்டாமா?" - y சொல்லும் செய்தியைத் தெளிவாகச் சொல் லுங்கள். எங்கே எப்பொழுது என்ன நடந்தது?"

"நம்முடைய சிவபிரானுக்குரிய பொருள் திருட் டுப் போனல் அதை நாம் விடலாமா? .

விடக்கூடாது. ஆலயத்தில் திருட்டுப் போகி றது என்ற செய்தி உமக்கு எப்படிக் கிடைத்தது? அதை மெய்ப்பித்துக் காட்ட முடியுமா?" என்று படபடப்பாகக் கேட்டார் கோயிற் பொறுப்பாளர். ஆலயத்துக்குள்ளே திருட்டு நடக்கவில்லை. தோன்ருத்துணேயப்பருக்குச் சொந்தமான பொருள். கோயிலுக்கு வெளியேயும் இருக்கிறதல்லவா? அது திருட்டுப் போகிறது. - - -

என்ன பொருள்' நான் இதைக் கவனித்து வந்து சொல்லு, கிறேன். நீங்கள் அதுபற்றிச் சிறிதும் கவலைப்படு பவராகத் தோன்றவில்லை. சிவபெருமானுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/89&oldid=574854" இலிருந்து மீள்விக்கப்பட்டது