பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறகு பெரியாருக்குப் பிறகு - அண்ணாவுக்குப் கருணாநிதிதான் என்றால் கருணாநிதிக்குப் பிறகு யார் ? யாரும் இல்லையா? என்ற கேள்விக் குறியை நான் விட்டு விட்டுச் சென்றால் என்னைவிட இந்தச் சமுதாயத்திற்குத் துரோகம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. யோசனைகள் தம்பி சிவகுமார். இங்கே 'காரவன்' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பதைப் படித்துக் காட்டினார். பத்தி அவர் அந்தப் பத்திரிகையினுடைய முடிவுரையில் கட்டுரை யாளர் குறிப்பிட்டிருக்கின்றார். 'சூத்திரர்' சமுதாயத்தை வழி நடத்திச் செல்லக்கூடிய அந்தப் பணியை கருணாநிதி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று 'காரவன்' ரிகையிலே எழுதியுள்ளதைக் குறிப்பிட்டுவிட்டு, 'அந்தப் பணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் சிங்கம்போல் கர்ஜித்தார் என்ற நிலைமை இல்லாமல் ஒரு புழுப்போல் செத்தார் என்ற நிலைமைதான் ஏற்படும்" என்று 'காரவன்' பத்திரிகையிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் 66 சொன்னார். அதே நேரத்திலே அவர்கள் வேறு சில யோசனை களையும் எனக்கு வழங்கி இருக்கிறார்கள். இந்த அரசியலையே விட்டுவிட்டு சமுதாயப் பணிக்குப் பாடுபடவேண்டும்; 'சூத்திரர்'களுக்காகப் பாடுபடவேண்டும் என்று 'காரவன்' பத்திரிக்கையிலே எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். புரியாதவர்கள் சூத்திர மக்களுக்காகப் பாடுபடத் தயார். அந்த நேரத்தில் அரசியல் சூத்திரதாரிகளையும் சந்திக்க வேண்டிய நிலைமை எனக்கு இருக்கிறது என்பதை ‘காரவன்' பத்திரிகைக்காரர்கள் தொலைவிலே இருக்கிற காரணத்தால் புரிந்திருக்கமாட்டார்கள்.