பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 இங்கே சமுதாயப் பிரச்சனை என்பது தனியாக அப்பட்டமாக தனித்தன்மை வாய்ந்த பிரச்சனையாக இல்லை. இங்கே சமுதாயப் பிரச்சினை என்பது அரசியலோடு கலந்து இருக்கிற பிரச்சினை. இங்கே சமுதாயப் பிரச்சினை என்பது பொருளா தாரத்தோடு இன்றைக்குக் கலந்திருக்கிற ஒரு பிரச்சினை. தந்தை பெரியார் ஏன் காமராசரை ஆதரிக்கவேண்டி இருந்தது? சமுதாயப் பிரச்சினையும் அரசியலும் கலந்து இருந்த காரணத்தால்! இல்லாவிட்டால், பெரியார் தேர்தலிலே அவர் நிற்கா விட்டாலும் - இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் தந்தை பெரியாருக்கு ஏன் ஏற்பட்டது? என்ன காரணம்? சமுதாயப் பிரச்சினையும் அரசியல் பிரச்சினையும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கிடக்கின்றகாரணத்தாலேதான் பச்சைத் தமிழர் காமராசர்-அவருக்கு வாக்களியுங்கள் என்று அதற்குரிய காரணங்களை அன்றைக்குத் தந்தை பெரியார் சொன்னார். எதனால்? திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே ஆட்சியை உருவாக்கிய பிறகு, அண்ணா அவர்களுடைய ஆட்சி தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காகவும் 1971ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகமும் இந்திரா போட்டி காங்கிரசும் சேர்ந்து இணைந்து தேர்தலிவே யிட்ட நேரத்தில் பெரியார் அவர்களுடைய ஆதரவு. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இந்திரா காங்கிர சுக்கும், அன்றைக்குத் தமிழகத்திலே கிடைத்ததென்றால் எதனால்?