பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அரசியலும் சமுதாயமும், நம்முடைய பகுதியைப் பொறுத்தவரையில் தனித்தனியாகப் பிரிந்து கிடக்க வில்லை, பின்னிக்கிடக்கிறது. எனவேதான் தொலைவிலே இருக்கின்ற 'காரவன்' பத்திரிகை கட்டுரையாளருக்கு அது தெரிய நியாயம் இல்லை. இங்கே அரசியலும் சமுதாயமும் பின்னிக்கிடக்கிற காரணத்தினாலேயேதான் ஒன்றைவிட்டு ஒன்று தனியாக வந்து விடமுடியாது. சில வேளைகளில் வீரமணி 4 அவர்கள், வெறும் சமுதாயப் பிரச்சினையைப் பற்றி மாத்திரம்தான் பேசவேண்டும் என்று சொன்னாலும்கூட, அவரும் சில நிலைமைகளில் அரசியல் பிரச்சினைகளைப் பேசத்தான் வேண்டியிருக் கிறது. தமிழகத்தைப் பற்றிப் பேசவேண்டுமேயானால் அங்கே சமுதாயப் பிரச்சினையும், அரசியல் பிரச்சினையும் வின்னிக் கிடக்கின்ற காரணத்தினால் அரசியலையும் தான் பேசவேண்டியிருக்கிறது. எனவே, நான் அரசியலைவிட்டு அறவே வந்துவிட வேண்டும் என்பது அவருடைய அன்பான அழைப்பு: காரணம்; நாலாந்தர மக்களாக - ஏழை எளிய மக்களாக இருக்கின்ற 'சூத்திர' மக்களுக்கு நான் தலைமை ஏற்க வேண்டும் என்பதற்காக அந்தக் கட்டுரை ஆசிரியர் விடுத்திருக்கின்ற அழைப்பு. சிலபேர் இருக்கிறார்கள் - அரசியலைவிட்டு எப்போது தொலைவான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் நான் அப்படிப்பட்டவர்களைப் பற்றி அப்படிப்பட்ட கருத்தைப்பற்றி இங்கே எதையும் சொல்ல விரும்ப வில்லை.