பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மத்தாகக் கட்டி! திருப்பாற் கடலைக் கடைகிறார்கள்! எதற்காகத் தெரியுமா? தேவாமிர்தம் எடுக்க! தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதைப்போல் திருப்பாற் கடலைக் கடைந்து தேவாமிர்தம் எடுக்கலாம் என்று மேருமலையை மத்தாக ஆக்கி வாசுகி என்கின்ற ஒரு பாம்பை அதற்குக் கயிறாகப் போட்டு - கோழை' களான 'அசுரர்'கள் பாம்பின் தலைப் பக்கத்தையும் 'வீரர்'களான 'தேவர்'கள் பாம்பின் வால் பக்கத்தையும் பிடித்துக் கொண்டு திருப்பாற் கடலைக் கடைந்து ஒரு பக்கத்திலே அமிர்தம் பொங்குகிறது; அதே நேரத்திலே ஆலகால விஷமும் வருகிறது! அமிர்தத்தை தேவர்கள் எடுத்துக் கொண்டார்கள்- கஷ்டப்பட்டு கடைந்தவர்கள் அல்லவா. வாலைப்பிடித்து! எனவே அமிர்தத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். பொங்கிய ஆலகாலம் அதல, சுதல, பாதாள லோகங் களையும் அழிக்கிறது. உடனடியாக சிவனிடத்திலே ஓடுகிறார்கள் அனைவரும். "அண்டபிண்ட சராசரங்கள் எல்லாம் ஆலகாலத்தால் அழிந்துவிடும் போல் இருக்கிறது. அய்யனே. மெய்யனே! எங்களைக் காப்பாற்றும்" என்று கேட்கிறார்கள். விழுங்கினானாம் சிவன் என்ன செய்கிறார் தெரியுமா? அந்த ஆலகாலத்தை அப்படியே கையில் எடுத்து உருட்டி வாயிலே போட்டுக்கொள்கிறார். அதை விழுங்கி விட்டால் உலகத்தை காப்பாற்றலாம் என்று. பக்கத்திலே இருந்த பார்வதிக்குப் பணம்! முழுவதும் உள்ளே போய்விட்டால் சிவன் இறந்துபோய்விடுவார் என்று! எனவே, கெட்டியாக சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொள்கிறார், விஷம் உள்ளே இறங்கக்கூடாது என்று !