பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வலிவும் அளிக்கவேண்டுமேயானால், சமுதாய சீர்திருத்தம் என்கின்ற அடித்தளம் இருந்தால்தான் பொருளாதாரம்- அரசியல் என்கின்ற இரண்டும் நிலைக்க முடியும். இதைத்தான் பெரியார் அவர்கள் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னார்கள். நேரு அந்தச் சமுதாயச் சீர்திருத்தத்தை இன்றைக்கு நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் உள்ளத்திலே பதியவைத்துக்கொண்டு தங்களுடைய அரசியல் இயக் கங்களை நடத்துகிறார்களா என்றால், இல்லை. சில எனவே, அங்கொன்றும் இங்கொன்றுமாக நேரங்களில், ஜாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுகிறோம்; மதப் பூசல்களைப் பற்றிப் பேசுகிறோம். அத்தோடு விட்டுவிடுகிறோம். என்று பண்டித ஜவகர்லால் நேரு திட்டவட்டமாக ஒன்றைச் சொன்னார். அவரி தன்னை ஒரு நாத்திகர் சொல்லிக் கொள்ளக்கூட அஞ்சியது இல்லை. அவர் ஆளுகின்ற பொறுப்பில் வீற்றிருந்த காரணத்தினால்- இந்தியாவினுடைய தலைமை அமைச்சராக ஏறத்தாழ பதினேழு ஆண்டுக்காலம், அவர் கொலு வீற்றிருந்த காரணத்தினால் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பும், மற்றவர்களுடைய உரிமையும் பறிபோய்விடக்கூடாது என்கின்ற சூழ் நிலையும் இருந்த காரணத்தினால் அவர் தாம் நாத்திகர் என்பதை-மதங்களிலே தமக்கு நம்பிக்கை இல்லை என் பதை வெளிப்படையாக எடுத்துக் காட்டவில்லை யென்றாலும், அவர் மறைந்த நேரத்தில்தான், தான் யார் என்பதை உலகத்திற்கு எடுத்துச் சொல்லி விட்டுத்தான் மறைந்தார். 3-2