பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அவரது உயில் அவர் மறைந்த பிறகு, அவர் எழுதி வைத்துச் சென்ற உயிலை எடுத்துப் படித்தபோது அதிலே காணப்பட்ட வாசகங்கள் எவை ? "நான் மறைந்துவிட்டால் எனக்கு வைதீக முறைப்படி எந்தச் சடங்குகளும் செய்யக்கூடாது! இது நேருவினுடைய உயிலில் காணப்பட்ட வாசகங்கள். அதுமாத்திரம் அல்ல; தம்முடைய உடல் எரிக்கப் பட்ட சாம்பலை இந்திய நாட்டு மண் முழுவதும் பரப்பு கின்ற அளவுக்கு விமானத்தில் எடுத்துச்சென்று ஆங்காங்கு தெளித்து விடுங்கள்; நான் ஓடி ஆடி மகிழ்ந்த கங்கை நதிக்கரையிலும், யமுனை நதிக்கரையிலும் சாம்பலைத் தெளித்து விடுங்கள்-எந்த வைதீகச் சடங்குகளும் நான் மறைந்த பிறகு எனக்காக நடத்தப்படக் கூடாது என்று தெள்ளத் தெளிவாக எழுதி வைத்துவிட்டுத்தான் பண்டித நேரு அவர்கள் மறைந்தார்கள். விடுபடுவீர் அவர் எழுதிய 'உலக சரித்திரம்' என்ற புத்தகத்திலே கூட அழகாகக் குறிப்பிடுகிறார்கள். 'மதம்' என்பது மனிதனை ஒரு நிலையோடு கட்டுப் படுத்தி வைத்து விடுகின்றது; விஞ்ஞானம் அப்படி அல்ல ; இதோடு எதுவும் முடிந்துவிடவில்லை. தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று முடிவற்றதாக விளங்குகிறது விஞ்ஞானம். முடிவுற்றதாக ஆகி இதற்கும் மேலே அங்கும் போகாதே இங்கும் போகாதே என்று கட்டுப்படுத்தி வைப்பதுதான் மதம். எனவே என்னைப் பொறுத்த வரையில் நான் மதத்தை விட விஞ்ஞானத்தை தான் அதிகமாக நேசிக்கிறேன் என்று, நான் அல்ல, தந்தை பெரியார் அல்ல-இந்தியத் தரணியை பதினேழு ஆண்டு காலம் ஆண்ட ஆசியாவின் ஜோதி, மனிதர்