பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல் மாணிக்கம் பன்டித நேரு அவர்கள் எழுதி வைத்திருக்கிறார் என்பதை மாணவர்களே உங்களுடைய இதயத்திலே நான் பதிய வைப்பது என்னுடைய கடமை என கருதுகிறேன். இதைச் சொல்லுவதால் மதப் பூசல்கள் விளைய வேண்டும் என்றோ, அனைவரும் நாத்திகர்களாக மாறிவிட வேண்டும் என்றோ உங்களுக்கு அழைப்பு விடுவதாக அர்த்தம் இல்லை. குறைந்தபட்சம் மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுகின்ற ஒரு சமுதாயத்தையாவது தோற்றுவிக்க நாமெல்லாம் முனைந்து முயல வேண்டாமா என்றுதான் உங்களையெல்லாம் கேட்க விரும்புகிறேன். தீபாவளி இந்தச் சமுதாயம் இன்றைக்கு இந்த அளவிற்குக் கெட்டிருப்பதற்கு என்ன காரணம்? நாம் நம்புகின்ற கதைகள் கொஞ்ச நஞ்சமா ? நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடப் போகிறோம் என்று என்னையும் சேர்த்துச் சொல்வதாக யாராவது பத்திரிகையிலே போட்டுவிடுவார்களேயானால் அது அவர்களுடைய தவறு. தீபாவளிக்காக எழுதி வைக்கப்பட்டிருக்கின்ற புராணங்களை கதைகளை அவைகளையெல்லாம் நம்பித்தானே தீபாவளி கொண்டாடப்படுகிறது! - - தீபாவளி ஒரு உற்சாகமான விழா! அழகான விழா! தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்ற விழா! ஆங்காங்கு வைக்கின்ற விழா! மங்கல விளக்குகளை ஏற்றி இன இழிவு தீபாவளியை முன்னிட்டாவதுபோனஸ்கிடைக்கிறது- வேட்டி கிடைக்கிறது - நல்ல புடவை கிடைக்கிறது!!