பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அதையும் கெடுக்கிறாயே என்று யாராவது கேட்பீர்களே யானால் தீபாவளி பண்டிகை என்கின்ற அந்தச்சொல்லின் மீதல்ல எனக்கு வருத்தம்; அதிலே எனக்கு மறுப்பு இல்லை. சுயமரியாதை இயக்கமோ, தன்மான இயக்கமோ அந்தச் சொல்லை மறுத்திடவில்லை. அதற்காகச்சொல்லப் படுகின்ற கதை ஒரு இனத்தையே இழிவுபடுத்துவதாக இருக்கிறதா? இல்லையா? ஒரு பத்திரிகை . ஒரு வாரப்பத்திரிகையின் ஆசிரியர், ஒரு நிருபரை நான்கு நாளைக்கு முன்பு என்னிடத்திலே அனுப்பி வைத் திருந்தார்கள். 'என்ன?' என்று கேட்டேன். தீபாவளிக்கு செய்தி வேண்டும்' என்று கேட்டார். 'என்ன செய்தி வேண்டும் ? என்ன தலைப்பிலே வேண்டும்?' என்று கேட்டேன். அந்த நிருபர் சொன்னார்: 'நரகாசூரன்என்ற தீயசக்தி ஒழிக்கப்பட்ட நாள், அந்த நாள். எனவே, அந்த நாளிலே இன்னும் என்னென்ன தீயசக்தியை ஒழிக்கபட வேண்டும் என்பதை செல்லுங்கள்' என்று சொன்னார். "நான் தீபாவளியும் கொண்டாடுவது இல்லை; நரகாசூரனையும் தீயசக்தி என்று என்னுவதில்லை. எனவே, நான் எப்படிச் செய்தி தரமுடியும்?" கேட்டேன். என்று 'சரி, பொ ரதுவாக தீயசக்திகளைப்பற்றி எழுதிக் கொடுங்களேன்' என்று கேட்டார். எனவே, பொதுவரக தீயச்சக்திகளைப்பற்றி எழுதி, வன்முறை வெறியாட்டங்களும், சாதிப் பூசல்களும், மதச் சண்டைகளும், அநாகரிக முறைகளும் ஆகிய தீய சக்திகள் ஒழிந்தபாடில்லை என்கின்ற கருத்தை எழுதி அனுப்பினேன். கதையென்ன ? அதை அவர்கள் அவர்களுக்கும் மேலே உள்ள எஜமானர்களிடத்திலே காட்ட, அது அவருக்கு மேலே