பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுகி, புத்தாடை 22 உடுத்தி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்றி வைப்ப 'தாக பூமாதேவியும் சொன்னாள். அதற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. கேள்விகள் இந்தக் கதையிலே வரிக்கு வரி கேள்வி எழுகிறதா? இல்லையா ? இந்தக் கேள்விகள் எல்லாம் இடைக் காலத்திலே எழாமல் போன காரணத்தினாலே தான் நம் தமிழகத்தினுடைய இளைஞர்கள், பெரியார் என்றால் யார்? அவர் என்ன கொள்கைகளைச் சொன்னார் அண்ணா என்றால் யார்? அவர் என்ன கொள்கைகளைக் சொன்னார்? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்றால் யார்? அவர் என்ன கவிதைகளை-எந்தக் கருத்தின் அடிப்படையிலே எழுதினார் ? என்பவைகளையெல்லாம் மறந்துவிட்ட ஒரு துயரமான நிலை இன்றைக்கு ஏற்பம் டிருக்கின்றது. துயர நிலை பாய் முதலிலேயே கதை அடிபடுகிறதா ? இல்லையா? ஒரு அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள்ளே போய் ஒளிந்துகொண்டான் என்றால், மாணவர்களைக் கேட்கிறேன்; பூமி என்ன போலவா இருக்கிறது, சுருட்ட ? பூமி உருண்டையானது அல்லவா ? அது உருண்டை என்று கண்டுபிடிப்பதற்கு முன்பு எழுதிய புராணம் அது. பூமி பாயாகச் சுருட்டப் படுகிறது. பூமியில்தானே அந்தக் கடலும் இருக்கிறது? பிறகு எப்படி கடலுக்குள்ளே பூமியை எடுத்துக்கொண்டு போய் ஒளிந்துகொண்டான்? கடலுக்குள்ளே எ போய் ஒளிந்துகொண்ட அந்த அரக்கனை வெல்ல மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத் தார். வராக அவதாரத்தைப் பார்த்து பூமாதேவி காதல் கொண்டாள்.