பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஏன் மீசையும் தாடியும் பெண்களுக்கு இல்லை? ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு பதிலையும் விப்பிர புராணத்திலே எழுதினார்-புராணத்தின் பெயர் விப்பிர புராணம். ஒரு ரிஷி இருந்தார், தேவலோகத்திலே அந்த ரிஷிக்கு பூலோகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை. தனியாகச் சென்றால் உல்லாசமாக இருக்காது என்று தன்னுடைய துணைவியையும் அழைத்தார். துணைவியார் 'பருவம் அடைந்த மங்கை நமக்கு இருக்கிறாள் ; அவளை தேவலோகத்தில் தனியாக விட்டு விட்டுப்போனால் என்ன ஆவது. எனவே, நான் வில்லை" என்று சொன்னார். வர "இல்லை இல்லை; நீயும் வரவேண்டும். நாம் பருவம் அடைந்த பெண்ணை பத்திரமான இடத்திலே விட்டு விட்டுப் போகலாம்" என்று சொன்னார். யாரிடத்திலே விட்டுவிட்டுப் போகலாம்? என்று யோசித்தார்கள். சிவனிடத்திலே விட்டுச் செல்லலாமா? உடனே அவர் களுக்குரிய ஆராய்ச்சி, அவர் பக்கத்திலே பார்வதியும் தலையிலே கங்கையும் வைத்திருப்பவர் ஆயிற்றே ! இந்த இருவரும் போதாமல் தாருகாவனத்து ரிஷிப்பத்தினிகளை யெல்லாம் கற்பழித்ததாகக் கதை இருக்கிறதே! அவரை நம்பி நம்முடைய பருவச்சிட்டை எப்படி விட்டுச் செல்வது? இந்தக் கேள்வி எழுந்த காரணத்தால் சிவனைக் கை கழுவினார்கள். விஷ்ணு விஷ்ணுவிடம் விட்டுச் செல்லலாமா? என்று எண்ணி னார்கள்.