பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அவன் பாமா, ருக்மணி போதாமல் ஆயிரக்கணக் கான கோபிகாஸ்திரிகளோடு விளையாடி அடுத்த வீட்டுக் காரன் மனைவியான ராதையிடமும் விளையாடியவன் ஆயிற்றே! எனவே, அவனிடத்திலே எப்படி விட்டுச் செல்வது? என்ற அய்யப்பாடு ஏற்பட்டது அவரையும் கை கழுவினார்கள் சரி, இந்திரனிடம் விட்டுச்செல்லலாமா? என்றவுடன் "சரிதான் போங்கள் அவரிடத்திலா ? அவர் ரிஷிபத்தினி அகலிகையையே கற்பழித்து அவருடைய உடலெல்லாம் ஆயிரம் கண்கள் - புண்கள் என்கின்ற அளவுக்கு கடும் கோபத்திற்கு ஆளானவர் ஆயிற்றே, அவரிடமா ?" என்று பத்தினி கேட்டாள். தர்மராஜன் கடை சியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். எமனிடத் திலே விட்டுச்செல்லலாம் என்று அவன்தான் தர்மராஜன். நல்லவன்; அவனிடத்திலே விட்டுச்செல்லலாம் என்று முடிவுக்கு வந்து எமனிடத்திலே அந்தப் பெண்ணை ஒப்படைத்துவிட்டு, ரிஷியும் ரிஷிபத்தினியும் பூலோகத் திற்குப் புறப்பட்டார்கள். எமன் ஒருதரம் தன்னுடைய அரண்மனையிலிருக்கும் அந்தப்பெண்ணைப் பார்த்தான். தர்மராஜன் அல்லவா? அவனுக்கே சபலம் தட்டியது எனவே, அந்தப் பெண்ணிடத்தில் தன்னுடைய ஆசையை வெளியிட்டான் எமன். அவளும் ஆசையை வெளியிடுபவன் எமன் ஆயிற்றே என்ற காரணத்தால் சம்மதித்தாள் ! அக்கினி இருவருக்குமிடையே நட்பு உதயமாயிற்று இந்த நட்புக்கிடையே எமனுக்கு ஒரு சந்தேகம். நாம் செய்கிற காரியம் யாருக்காவது தெரிந்து விட்டால் என்ன ஆவது என்பதற்காக எமன், பகல் நேரத்திலே எல்லாம் அந்தப்