பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மூன்று இலை எமனிடத்திலே மாத்திரம் மூன்று இலைகள் போடச் சொல்கிறான் வாயு பகவான். சிவன், "என்ன அவனுக்கு மாத்திரம் மூன்று இலைகள் ? எங்களையெல்லாம் அவமதிக்கிறாயா?' என்று கேட்கிறார். சொல்ல 'இல்லை இல்லை ; கொஞ்சம் பொறுங்கள்' என்று சொல்லிவிட்டு, எமனைப் பார்த்து, 'எமனே, உன்னுடைய வயிற்றிலே இருக்கின்ற அந்தப் பெண்ணை வெளியே உமிழ்வாயாக!' என்றதும், எமன் எதுவும் முடியாமல் அந்தப் பெண்ணை வெளியே உமிழ்கிறான். அந்தப் பெண் வெளியே வந்து இன்னொரு இலையிலே உட்காருகிறாள். - இரண்டு இலை இரட்டை இலை -ஆயிற்று! ஆனவுடன் அவர் கேட்கிறார் ; 'சரி மூன்றாவது இலை எதற்காக?' என்று எமன் ஆத்திரத்தோடு கேட்கும் பொழுது, வாயுபகவான், அந்தப் பெண்ணைப் பார்த்து 'பத்தினித் தங்கமே! உன் வயிற்றுக்குள் இருக்கின்ற என் ஆருயிர் நண்பன் அக்கினி பகவானை வெளியே அனுப்பு' என்று சொல்லுகிறான். தயவுசெய்து உடனே அவள் நடுங்கி வயிற்றுக்குள் இருந்த பகவானை வெளியே உமிழ. அக்கினி பகவான் வெளியே வருகிறான். அவன் வெளியே வருகிற அந்த நடுக்கத்தில் அந்தப் பெண்ணுடைய முகத்திலே இருக்கின்ற தாடி, மீசையெல்லாம் பொசுங்கிவிடுகிற கிறது. பொசுங்கல் அதுவரையிலே உலகத்திலே இருந்த பெண்களுக்கு ஆண்களைப் போல முகத்திலே தாடி, மீசை இருந்தது. கதைப்படி ! அக்கினி வெளியே வந்த நடுக்கத்திலே தாடி, மீசை யெல்லாம் பொசுங்கிற்றல்லவா! அது முதல் உலகத்திலே