பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 தாடி மீசை இல்லாமலே பிறந்த எல்லா பெண்களும் பிறக்கிறார்கள். இது ஒரு கதை! இப்படிப்பட்ட கதைகளையெல்லாம் இன்னமும் நம்பிக்கொண்டு உலகத்திலே நடைபெறுகின்ற எல்லா விதமான நடவடிக்கைகளுக்கும் புராணப்படி-வை தீகப்படி சனாதன கருத்துப்படி கதைகளைக் கட்டி வைத்துக் கொண்டு எவ்வளவு நாளைக்கு இந்தச் சமுதாயம் ஏமாறுவது? என்ற கேள்வியின் அடிப்படையில் எழுந்த பதில்தான் தன்மான உணர்வு! பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம். இவைகள் எல்லாம் இந்த நாட்டில் தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேல்நாட்டில் இங்கே இருப்பதைப் போல மேல் நாடுகளிலும் கடவுள்கள் இல்லாமல் இல்லை. அந்தக் கடவுள்கள் எல் வாம் இன்றைய தினம் மாஜிகடவுள்களாக விட்டார்கள். ஆகி அந்தக் கடவுள் சிலைகள் எல்லாம் அங்குள்ள பொருட்காட்சிகளில் கண்காட்சிகளாக வைக்கப்பட்டு, உலகத்திலே இருக்கின்ற சுற்றுப்பயணிகள் பார்த்துக் களிக்கக் கூடிய நிலைமையில் அந்தக் கடவுள்கள் ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். ஆனால், இங்கே நாம் ஆயிரக்கணக்கான கடவுள் களை வணங்கிக் கொண்டிருக்கிறோம். அய்யா சொன்னால் கோயம் வரலாம். அண்ணா சொன்னாரே என்று ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். கருணாநிதி சொல்வதற்குக் கடும் ஆத்திரம் கிளம்பலாம்; வீரமணி சொல்கிறாரே என்பதற்காக வெறுக்கலாம். 'தேசிய கவி’ தேசியகவி சுப்பிரமணிபாரதி என்ன சொன்னார்!