பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆயிரம் தேய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!" இந்த வார்த்தையைப் பெரியார்கூட இவ்வளவு தாராளமாகப் பயன்படுத்தவில்லை. அண்ணாகூட பயன் படுத்தவில்லை -இவ்வளவு தாராளமாக ! "ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!" என்று தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பாட வில்லையா ! எனவேதான் நாம் ஆயிரக்கணக்கான தெய்வங் களுக்கு - நூற்றுக்கணக்கான ஜாதிகளுக்கு மத வேறுபாடு களுக்கு - நம்மைப் பலி கொடுத்து விட்ட காரணத்தால் நம்மை உட்படுத்திக் கொண்டு, ஆட்படுத்திக் கொண்டு விட்ட காரணத்தால் இந்தச் சமுதாயத்தினுடைய முன்னேற்றமே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலம் பின்னோக்கிக் கிடக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. வளரும் நாடுகள் உலகத்திலே வளர்ந்து வரும் நாடுகளையெல்லாம் பார்க்கிறோம். சீரிழந்த ஜப்பான் இன்றைக்கு சிங்கார புரியாக வளர்கிறது உடைந்து நொறுங்கிப்போய் விட்ட ஜெர்மானிய நாடு இன்றைக்கு உல்லாச பயணிகளையெல்லாம் வரவேற்கின்ற உற்சாகப் பூமியாக விளங்குகின்ற காட்சி யைக் காணுகிறோம். லண்டன் மாநகரம் குண்டுகளால் பாழடிக்கப்பட்ட துண்டு. ஆனால் இன்றைக்கு லண்டன் மாநகரமானாலும் இங்கிலாந்து தேசமானாலும் அங்கே வளமான வாழ்வு, விஞ்ஞான யுகத்தை நோக்கிச் செல்லுகின்ற வாழ்வு. இருப்பதைப் பார்க்கிறோம்.