பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 காணப்படாத கண்டமாக இருந்து ஆங்கிலேயர்கள் முதலிலே குடியேறி, பிறகு அவர்களே தங்களுடைய நாடு என்று உரிமையாக்கிக் கொண்டு வளர்ந்து வந்திருக்கின்ற அமெரிக்கத் திருநாடு - நாம் இங்கே நின்று குழந்தைகளுக்கு கண்ணாடியிலே காட்டிக் கொண்டிருக்கின்றோமே, 'அம்புலி பார் அம்புலி பார்!" என்ற று. அந்த அம்புலியினுடைய உலகத்திலேயே, தன்னுடைய காலடியை எடுத்து வைத்துவிட்டுத் திரும்பி இருக்கிறது என்றால் இவைகள் எல்லாம் விஞ்ஞானத்தி னுடைய வளர்ச்சி இல்லையா ? இளைஞர்கள் அந்த விஞ்ஞானத்தைப் போற்றி வளர்க்க--அதிலே நாம் வலிவு பெற்ற நிலையை உண்டாக்க-விஞ்ஞான ரீதியாக ஒரு சமுதாயத்திலே ஏற்பட்டிருக்கின்ற மூட நம் பிக்கைகளையெல்லாம் தகர்த்தெறிய இளைஞர்களால் தான் முடியும். எனவே, அந்த இளைஞர்களை நம்பித்தான் எதிர் காலம் இருக்கிறது; தமிழகம் இருக்கிறது; இந்தியா இருக்கிறது; இந்த உலகம் இருக்கிறது. எனவே, அந்தத் தமிழ் இளைஞர்களையெல்லாம் நான் அழைக் கிறேன். அத்தகைய முன்னேற்றம் காணவாருங்கள். வாருங்கள் என்று அழைக்கிறேன். மாணவர் தலைவர் இங்கேபேசும்போது-கருணாநிதி வாலிபனாக இருந்தபோது பாடிய பாட்டு என்று சொன்ன போது எனக்கேகூட சங்கடமாகத்தான் இருந்தது. வா நினைவுகள் வாலிபனாக இருந்தபோது இப்படி வழுக்கைத் தலையோட இருந்தேன்? இல்லை இதே ஈரோட்டில் நான் காளை போல் நடமாடிய காலம் உண்டு. என்னுடைய இளவல் கி வீரமணி அவர்கள் சின்னஞ் சிறுவனாக மேடையில் ஏறிப் பேசிய அந்தக் காலத்தில் தான் இளைஞனாக இருந்து எழுதிய பாடல்களில்