பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சிலவரிகளை இங்கே மாணவர் தலைவர் முகமது அலி பாடிக் காட்டினார்கள். "பாராட்டி போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்" என்று எழுதியதைப் பாடிக் காட்டினார்கள். எனக்கு எத்தி னையோ பசுமையான நினைவுகள். 1944-45-ம் ஆண்டுகளில் பெரியாரோடு இந்த நகரில் வாழ்ந்த அந்தக் காலத்தை எல்லாம் எண்ணிப் பார்க்கிறேன். புதுவை மாநிலத்தில் கயவர்களால் தாக்கப்பட்டு செத்து விட்டான் என்று சாக்கடையில் வீசி எறியப்பட்ட என்னைத் தூக்கியெடுத்து எந்தக்கரம் என்னுடைய நெற்றியில் காயங்களுக்கு மருந்திட்டதோ அந்தக்கரம் இன்றைக்கு இல்லையே என்கிற கவலையோடுதான் ஈரோட்டு நகரில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக் கிறேன். புதுவையில் ஈரோட்டுப் பாசறையில் இருந்து நான் பல கவிதைகளை எழுதியிருக்கிறேன். தமிழர்களுடைய புறநானூற்றுப் பெருமைகளை விளக்குகின்ற கவிதைகளும் எழுதியிருக்கிறேன். அதிலே ஒரு கவினையைச் சொல்ல விரும்புகிறேன். (கலைஞர் கவிதையை உணர்ச்சியுடன் கூறி முடிக்கிறார்) (பலத்த கைதட்டல்) இந்த புறநானூறு பற்றிய விளக்கக் கவிதையை எழுதிய கரம்தான் இந்தக் கரம்! இந்தக் கரத்திற்கு எழுச்சியை ஊட்டியது தந்தை பெரியாரின் கரம்! இதற்கு எழில் சேர்த்தது அண்ணாவின் கரம்! எழுதுவதுதான் எ என் கரம் என்று கூ ன்று கூறி, இத்தகைய கரங்களை வலுப்படுத்த வாரீர்! வாரீர் என்று அழைத்து விடைபெறுகிறேன்! [5-9-80 அன்று புதுவையில் புதுவை அரசு எடுத்த முப்பெரும் விழாவிலும், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையின் தொகுப்பு] ஆற்றிய