பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணிடாமல் இங்கே நண்பர்கள் எடுத்துக்காட்டிய தைப்போல் - குறிப்பாக நம்முடைய உள்ளாட்சித் துறை அமைச்சர் தன்னுடைய சொல்லாட்சித் திறனால் எடுத்துக் காட்டியதைப்போல் -தத்துவத்திற்கு - விளக்கத்திற்கு விழா எடுத்துக்கொண்டிருக்கின்றோம் ; லட்சியங்களுக்கு விழா எடுத்துக்கொண்டிருக்கின்றோம். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அருமை நண்பர் சண்முகம் அவர்கள் சொன்னார்கள் - பெரியார் அவர்களுடைய வழியில், பேரறிஞர் அண்ணா அவர் களுடைய பாதையில், அவர்கள் யாத்துத் தந்த கொள்கைகளை இந்த அரசு உருவாக்குகின்ற வண்ணம், அய்ந்தாண்டுக் காலத்திலே பல திட்டங்களை நிறை வேற்றுவதற்கு இந்தக் கூட்டணி ஆட்சி முன் நிற்கும் என்ற உறுதியினை அவர்களும் எடுத்துச் சொன்னார்கள். முதல்வர் அவர்களும் எடுத்துச் சொன்னார்கள்- மற்ற அமைச்சர் பெருமக்களும் எடுத்துச் சொன்னார்கள். அதை ஒரு வேண்டுகோளாக நண்பர் வீரமணி அவர்களும் இங்கே எடுத்து வைத்தார்கள். எதிர்ப்புகள் பெரியார் அவர்கள் தன்னுடைய கொள்கைகளை மக்கள் மத்தியிலே வைக்கும்போது அதை மக்கள் வெறுத்தது உண்டு. அதை எடுத்து சொல்கின் ற பெரியாரை துரத்தி அடித்ததும் உண்டு. பெரியார் பேசக் கூடாதென்று கல்லெறிந்தோ, சொல்லெறிந்தோ சோடா புட்டிகளை வீசியோ, செருப்பு மாலைகளை அணிவித்தோ இப்படி ஏராளமான நிகழ்ச்சிகள் பெரி யாருடைய வாழ்க்கையிலே நடைபெற்றது உண்டு. - அதைப்போலவே பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச்சொன்ன எண்ணங்களை ஏற்றுக்கொள்ளாமல், லட்சியங்களை கடைப்பிடிக்க முடியாது என்று அறவே மறுத்து அண்ணா அவர்களுடைய கூட்டங்களைக் கலைத்த நிகழ்ச்சிகள் ஒரு காலத்திலே இருந்தன.