பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= அதுவும் பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும், அவர்கள் இருவரும் சேர்ந்து நடத்திய சுயமரியாதை இயக்கமும், தன்மான இயக்கத்தினுடைய கொள்கையும் ஐட்டிதொட்டியெல்லாம் பரவுவதற்கு அவர்கள் பாடுபட்ட போது எவ்வளவு பெரிய ஜாதி வெறியர்களுடைய வைதீகச் சின்னங்களுடைய-சனாதானிகளுடைய-மதவாதி களுடைய எதிர்ப்புக்களைத் தாங்க வேண்டியிருந்தது என்பதை தமிழகத்தினுடைய சரித்திரம் தென்ன கக்தினுடைய சரித்திரம் என்றைக்குமே மறைத்து விடாது. கசப்பு மருந்து - பெரியார் கசப்பான மருந்தை தந்தார். அண்ணா அந்த கசப்பான மருந்தை அப்படியே தந்தால் அதை உட்கொள்ள மறுத்து நோயிலிருந்து விடுபடாமல் ஆகிவிடுவார்கள் மக்கள் என்பதற்காக அதை தேனிலே குழைத்துத் தந்தார். பெரியார் பூமியைத் தோண்டி பொன் எடுத்து தந்தார். அண்ணா அதைப் பூட்டிக் கொள்ளக்கூடிய அணிமணிகளாகச் செய்து தந்தார் பொன் கட்டியை அணிமணியாகச் செய்யும்பொழுது கொஞ்சம் சேதாரம் ஏற்படுவது உண்டு கொஞ்சம் பொன் கீழே சிந்துவதும் உண்டு. அந்தச் சேதாரத்தைப் பற்றி அண்ணா கவலைப்படவில்லை. பெரியாரும் கவலைப்படவில்லை. பெரியார் வைரக்கட்டிகளை எடுத்துத் தந்தார்; அண்ணா அந்த வைரக்கட்டிகளுக்குப் பட்டை தீட்டி ஒளியுமிழச் செய்தார். தீர்ப்புகள் பட்டை தீட்டுகிற நேரத்திலே வைரம் கொஞ்சம் பாதிக்கப்படும் ஆனால் ஒளிமிகும்.