பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.7 இரு பாதைகள் இன்னொருவர் பேரறிஞர் அண்ணா-நான் உன்னை கரடுமுரடான பாதையிலே அழைத்துச் சென்றால் வரமாட்டாய். எனக்குக் கரடுமுரடான பாதை பழக்கம் தான் என்றாலும்கூட, என்னுடைய காலிலும், கையிலும் பட்டிருக்கின்ற தழும்புகள் எல்லாம். பெரியார் என்னை இழுத்துச் சென்றபோது ஏற்பட்ட காயங்களால் உருவான தழும்புகள் என்றாலும்கூட, நீ அந்தப் பாதையைத் தாங்க மாட்டாய்; ஆகவே. இதோ இருக்கிறது. தார் போட்ட சாலை-வா; என்று தன்னுடைய தமிழ் நடை போட்ட சாலையில் அழைத்து வந்தார் - தமிழ்ச் சமுதாயத்து மக்களை. ஒரே குறிக்கோளை நோக்கி இரண்டு பாதைகள். ஒன்று கரடுமுரடான பாதை, மற்றொன்று பளபளப்பான பாதை இரண்டு பாதைகளும் ஒரே லட்சியத்திற்காகத் தந்தை பெரியார் அவர்களாலும் பேரறிஞர் அண்ணா அவர்களாலும் முறையே வகுக்கப்பட்ட பாதைகள் அந்நாள் முதல் இன்றைக்கு உங்கள் முன்னால் நின்றுகொண்டு நான் பேசுகிறேன் என்றால், என்னுடைய நண்பர் வீரமணி பேசினார் என்றால், தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் இந்தப் பாதையை அமைக்கத் தொடங்கிய காலகட்டத்தில் அவர்களோடு இருந்தவர்கள். இதே புதுவை மாநகரத்தில்-வீரமணி குறிப்பிட்ட தைப் போல்- முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைக்கு கயவர்களால்-திராவிட இயக்கத்தின் எதிரி களால்-நான் தாக்கப்பட்டு "முடிந்துவிட்டது என்னுடைய கதை" என்று எறிந்துவிட்டுப்போன நிலையில் என்னைத் தேடிக் கண்டுபிடித்து, பட்ட காயங்களுக்கு மருந்து தடவிய கைதான் தந்தை பெரியார் அவர்களுடைய கையாகும்.