பாவலரேறு பெருஞ்சித்திரனார் • 99
விளக்கிய தெய்வியற் கூறுகளினும் விளங்கக் காட்டினர். திருக்குறளிலும் 'மானம்' என்னும் அதிகாரத்துள் வரும் பத்துக் குறட்பாக்களிலும் மானவுணர்வு பிரிவுப் பொருளுணர்ச்சியான் புலப்படுத்தப் பெறுவதைக் காணலாம். இனி இவ்வதிகாரம் குடியியலில் காட்டப்பட்டதன் இன்றியமையாமை, ஒரு குடி தன் பெருமையை மானவுணர்வினாலேயே கட்டிக்காத்துக் கொள்ள வேண்டும் என்பதனால் என்க. அவ்வாறு அவ்வதிகாரப் பொருளுணர்வு தோன்றும்படி, அதற்குமுன் 'குடிமை’ அதிகாரத்தையும், அதன்பின் 'பெருமை' அதிகாரத்தையும் வைத்து, அவ்விரண்டின் நடுவாக மானத்தை வைத்துக் காட்டினார் என்க.
இனி, மானம் பிரிவுணர்வென்றறிந்தும் இதனைக் குடிமைக்கு உரிமைப்படுத்தி உரைப்பானேன் எனின், குடிப்பெருமை கட்டிக் காாக்கப் பெறவேண்டும் என்பதில் பொது மானம் கருதப்பட வேண்டுமேயன்றி தனி மானம் அஃதாவது, தன்மானம் கருதப்படுதல் கூடாதென்னும் குறிப்புப்பட, இதனைக் குடிமைக்கும் பெருமைக்கும் நடுவாக வைத்துக் கூறினார் என்க. இனி, இதனோடு அமையாது. குடிநலம் காக்கப் புகுந்தான் ஒருவன், தன் தனிமானம் கருதுதல் கூடாதென்பதைக் 'குடி செயல் வகை' என்று சிறப்புற வகுத்துக் காட்டிய அவ்வியலின் தனியதிகாரத்தான் வலியுறுத்துவர், அம் மெய்ப்பொருளாசிரியர். இவற்றையெல்லாம் ஈண்டு விரித்துரைக்கின் ஆன்று அகலுமாகலின், நம் திருக்குறள் மெய்ப்பொருள் உரையின் - கண் மிகச் சுவைபட விளக்கிக் காட்டுவோம்; ஆண்டுக் காண்க.
இனி, இக்கால், நம் தமிழக முன்னேற்றத்தையும் அதனினும் பன்மடங்கு நம் தமிழர் முன்னேற்றத்தையும், இனி, அதனினும் பல மடங்கு நம் தாய்மொழியாம் தமிழ் முன்னேற்றத்தையுமே கருதியுழைக்கும் எண்ணத்தக்க ஓராண்டு கட்சிகளுள் தலையாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழத்தினின்று, உள்ளுடைந்து வெளியேறிய தலைவர்கள் ஒரு சிலரைப்பற்றிச் சிறிது இங்குக் கூறுவோம்:
நந்தமிழினத்தைக் கட்டிக் காக்கும் பெரும்பணியில், தம்மை முற் றும் அழித்துக்கொண்ட இவ்வினத் தலைவர்களாகிய பெரியாரும், அண்ணாவும் கண்டு காட்டிய கொள்கை வழியில், அவர்களைப் பின்பற்றி நடப்பதாக மக்கட்கு வெளிப்படுத்திக் காட்டிய தலைவர்கள் அவர்கள். அவர்கள் இதுகாறும் ஒத்தியங்கி வழிநடத்திய தி.மு. கழகம் கருக்குலைந்து கட்டு விடுமானால் என்னென்ன விளைவுகள் எதிர்ப்படும் என்று எவரும் சொல்லமுடியாது. அதன் இப்பொழுதைய தலைவராகிய கலைஞரும், அரசியலில் ஓரளவு ஆளுமைத் திறம் வாய்க்கப்