பக்கம்:தமிழின எழுச்சி.pdf/114

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
பொள்ளாச்சி மகாலிங்கம் கூட்டிய
புராணவியல் கருத்தரங்கு!


சென்னையில் கடந்த பெப்ருவரி 16, 17, 18-ஆம் நாட்களில் தொழில் தலைவர் பொள்ளாச்சி திரு. நா. மகாலிங்கம் அவர்கள், வரலாற்றுக்குத் துணை செய்யும் புராணவியல், வானியல் கருத்தரங்கம் (Seminar on Astronomical and Puranic data as aids to history) என்னும் பெயரில் ஒரு கருத்தரங்கத்தைக் கூட்டினார். இக் கருத்தரங்கை எதற்காகக் கூட்டி னார் என்பது பற்றி அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் இக்கருத்தரங்கின் பல்வகை நோக்குகளையும், கண்டுபிடிக்க வேண்டிய தீர்மானிப்புகளையும், அவற்றின் பயன்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் முகாமையானவை சில கீழே தரப்பெறுகின்றன.

1. இராமாயணத்தில் வரும் வானியல் குறிப்புகள், அதன் காலம் கி.மு.4100 என்றும், மகாபாரதக் குறிப்புகள் அதன் காலம் கி.மு. 3100 என்றும் உறுதி செய்கின்றன. இவ்விரு இதிகாசங்களை வெறும் கட்டுக்கதைகள் என்று கூறிவரும் மேலைநாட்டு அறிஞர்களின் கூற்றுகளை அடியோடு இக்கருத்தரங்கம் புறக்கணிக்கிறது.

2. தொன்மங்களில் (புராணங்களில்) சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றை வரலாற்றில் இணைத்துக் கொள்ளுதல் வேண்டும்.)

3. திராவிடர்கள், ஆரியர்கள் இருவரும் வெளியே இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களே, திராவிடர் கி.மு. 2000-த்திலும்,