பக்கம்:தமிழின எழுச்சி.pdf/118

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 117

அவற்றை அடியோடு ஒழித்து விட்டு இனி இந்தியாவுக்கே (அதாவது பாரதத்திற்கே) புத்தம் புதிய, ஏற்றம் மிகுந்த, ஒருமைப்பாடு நிரம்பிய வரலாற்றை எழுதி அதை உலகமெல்லாம் பரப்ப வேண்டும் என்றும், அவ்வரலாறுகளைத்தாம் இந்திய மாணவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும் என்றும் இவர்கள் இக்கட்டுரைகளில் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சி.சி. இராமச்சந்திரன் என்னும் ஆரியப் பார்ப்பனர் தம் கட்டுரையில் பல விடங்களில் பார்ப்பன குல தருமக் கருத்துகளைக் கூறி அவற்றுக்கு வரலாற்று வலிவை உண்டாக்கியுள்ளார். அவற்றுள் சில கருத்துகள் வருமாறு:

In fact sage, Vashista urged Bharatiyas to go and spread an ancient Arya Dharma all over the universe - 'Krivantha Viswam Aryam'. Arya is only 'Shreshta' in Dharma (i.e.) excellence in one's own "Kula Dharma". Sage Vashista and his disciples are said to have gone on sea voyage in 6000 B.C. onwards to European countries also to establish on Dharma"

(உண்மையில் வசிட்ட முனிவர் பாரதியர்களை உலகமெல்லம் சென்று, தம் பழமையான ஆரிய தருமங்களை - 'கிரிவந்த விசவம் ஆரியம்' (ஆரிய தருமங்களே மேலானவை) - அஃதாவது ஒருவன் தன் குல தருமங்கலே சிறந்தவை - என்னும் கருத்தைப் பரப்புமாறு வற்புறுத்தினார். அப்படியே வசிட்ட முனிவரும் அவருடைய மாணவரும் கடல் வழியாகச் சென்று, கி.மு. 6,000-ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் தம் கருத்துகளை நிலைநாட்டச் சென்றனர் என்று சொல்லப் பெறுகிறது)

'The term 'Arya' means only Dharma and not a race. All of you are Aryas (i.e. all castes in the Hindu fold so long all you keep to your own Swadharma which is your Kula Dharma')

('ஆரிய என்னும் சொல் தர்மம் என்று பொருளாகுமே தவிர ஓர் இனத்தைக் குறித்ததாகாது. நீங்களும், அஃதாவது இந்த மதப் பிரிவில் அடங்கும் எல்லாச் சாதியாரும், அவரவர் தருமங்களை அஃதாவது குல தருமங்களைக் கடைப்பிடிக்கும் வரையில் ஆரியர்களே',)

'Arya' is shresta in Dharmic Conduct as was Prevalant according to Shastras and one's own Kula Dharma'

(நடைமுறையிலுள்ள முன்னைய சாத்திரங்களின் படியும் குல தருமப்படியும் எவன் மேலாக ஒழுகி வருகிறானோ அவன் ஆரியன்.)