பக்கம்:தமிழின எழுச்சி.pdf/120

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 119

தமிழைக் காட்டும் பார்ப்பனரின் புல்லிய அறிவையும் ஏமாற்றையும் சூழ்ச்சியையும் என்னென்பது?

மேலும் இப்பார்ப்பன ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளில், இந்தியாவை, 'ஆரிய நாடு', ஆரிய தேசம் என்று எழுதிய பாரதியார் அளவுக்கு மீறிப் புகழப் பெற்றார். (Many Tamil Scholars have stated the whole of India is Arya Varta (i.e.) Arya Desa or Arya Nadu). 'ஆரியராவது திராவிடராவது' ஆரியர் என்பாரும் இல்லை ; திராவிடர் என்பாரும் இல்லை ' என்று கூறிய நாமக்கல் பாவலர் இராமலிங்கம் 'மேதை' என்றும், துணிவுள்ள, உரமுள்ள, புரட்சியுணர்வுள்ள புகழ்பெற்ற அறிஞர் (A brave and robust outburst of the famous Namakkal Kavignar) என்றும் பாராட்டுப் பெறுகிறார். ('அரசன் முத்தினால் அரம்பை' என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாமக்கல்லார் எதற்காக அரசவைப் புலவர் என்று பேராயக் கட்சியால் பாராட்டப் பெற்றார் என்பதும் அவர் பாத்திறனும் எல்லாருக்கும் தெரிந்தவையே!)

முடிவாக இக் கருத்தரங்கில் ஒரு புதுமையுமில்லை ; புரட்சியும் இல்லை. பார்ப்பனர்கள் தாம் இழந்துவரும் பழம்பெருமையை நிலைநாட்டிக்கொள்ள ஒரு தேசியப் போர்வையாகவும் ஒருமைப்பாட்டுணர்வு மேடையாகவும் இதைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்குப் பெயரும் புகழும் விரும்பும் சில ஏமாளிச் செல்வர்கள் துணையாகவும் அணையாகவும் பயன்படுத்தப் பெற்றுள்ளனர்.

மற்றபடி, ஆரிய திராவிட இனப் போராட்டங்களும் வேறுபாட்டுணர்வுகளும் இன்று நேற்று தோன்றியவையல்ல. ஆரியப் பார்ப்பனர் தம் கரவாலும், சூழ்ச்சியாலும், மந்திர தந்திர முயற்சிகளாலும் இன்றைக்கும் அவை உயிர் பெற்றே திகழ்கின்றன. பார்ப்பனீயம் தமிழர்களுக்குத் - திராவிடர்களுக்குச் செய்த - செய்து வரும் தீமைகள், கொடுமைகள், நச்சுச் செயல்கள் இன்றைக்கும் பச்சைப் பசுமையாகவே இருக்கின்றன. இல்லையென்று சொல்லிவிட முடியாது. இன்றும், அவர்கள் தமிழ்மொழிக்குச் செய்து வரும் கேடுகளையும் அறவே மறைத்து விடவும் முடியாது. அவர்கள் குருதியிலேயே ஊறிப்போன கொடுமை நஞ்சுகள் இவை. இவற்றையெல்லாம் மறுப்பதற்கென்றே - மறைப்பதற்கென்றே நடைபெறும் பல வடிவான முயற்சிகளுள் இக் கருத்தரங்கும் ஒன்று. இது போன்றவற்றிற்கு மகாலிங்கம் போலும் தமிழ்ச் செல்வர்கள் துணை போவது அவர்களுடைய இன இரண்டகத்தையே காட்டும். மேலும்மேலும் அரசுத் துணையோடு தம் செல்வ வளங்களைப் பெருக்கிக் கொள்ளவே முயற்சி செய்கிறார்கள் என்பதையே உறுதிப்படுத்தும். உண்மையை மூடி மறைக்கும்