பக்கம்:தமிழின எழுச்சி.pdf/124

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 123

தின்பதற்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகின்றார்களே, அடடா, அவர்களை நினைக்கையில்தான் நெஞ்சு பற்றிக் கொண்டு வருகிறது; மூளை புண்ணாகிக் குமைகிறது!

இவர்களின் அரசியலே, வண்ணச் சுவரொட்டிகளிலும், செய்தித் தாள்களின் முழுபக்க விளம்பரங்களிலுந்தாம் மிடுக்கு நடை போடுகின்றது. பல்லாயிரக்கணக்கான உருவாக்களைப் பாமடித்து விட்டுக் திரைப்படக் காரர்களின் பாணியில், இவர்கள் அச்சடித்து ஒட்டும் சுவரொட்டிகளால் யாருக்கு என்ன ஊதியம்? என்பதைப் பற்றி இவர்கள் ஒரு கணமேனும் சிந்தித்திருப்பார்களா? பிறந்தநாள் சுவரொட்டிகள் முதல், வாழ்த்துச் சுவரொட்டிகள்வரை இவர்கள் சுவர் அகலத்தில் மூன்று நான்கு வண்ணங்களில் அடித்து ஒட்டும் சுவரொட்டிச் செலவு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அத்தனைப் பணமும் இவர்களைப் பின்பற்றும் ஏழை உறுப்பினர்களின் கைகளிலிருந்தன்றோ வந்திருக்க வேண்டும். இல்லையானால், இவர்களால் கள்ள வாணிகச் சந்தையில் பெரும்பொருள் ஈட்டிய அல்லது ஈட்டிக் கொண்டிருக்கும் செல்வத் திருடர்களின் கமுக்க அறைகளிலிருந்தன்றோ, வெளிப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சுவரொட்டிகளுக்கும் தமிழின மீட்பு-முயற்சிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறதாக இவர்கள் கருதுகின்றனர். இவர்களின் அரசியலே சுவரொட்டியின் அகல நீளத்திலன்றோ வளர்ந்து வருகின்றது! எவ்வளவு மானக் கேடான நிலை இது.

இவ்வகையில், ஆளுங்கட்சியாக அரசுக்கட்டிலில் ஏறியவர்களைப் பற்றி எழுதவே கை கூசுகிறது. அடடடா! இவர்களின் ஆர்ப்பாட்டச் சுவரொட்டிகளுக்கு அளவே இல்லை. கொஞ்சமும் அவருவருப்படையாமல் இவர்கள் தங்கள் பெயர்களையும், செயல்களையும் சுவரொட்டிகள் வழியாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் இழிதகைமைதான் என்ன! அரசு நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் வகையில், இவர்கள் தங்களைப்பற்றி அடித்துப் பரப்பிக் கொள்ளும் சுவரொட்டிச் செலவு பொதுமக்களுடைய வரிப்பணத்தைச் சேர்ந்தது தானே! ஊரார் பணத்தில் பட்டப்பகலில் சொரிவாணம் விடும் இவ்வகை ஊதாரிச் செலவினங்களால் அரசுக்கு எத்தனை வகையில் இழப்பு! அண்மையில் செய்தித்தாளில் ஒரு பக்க அளவில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அதில் நம் (!) முதலமைச்சர் அவர்கள் ஒருபுறம் கைகூப்பி வணங்கிய வகையில், (அடடா! என்ன திரைப்பட நடிப்பு!) கடந்த இரண்டாண்டுகளில் அரசு நிறைவேற்றிய திட்டங்களை யெல்லாம் பட்டியலிட்டுக் காட்டியிருந்தார்கள். அதன்பின் இன்னொரு விளம்பரம் வந்திருந்தது. பெரியார், அண்ணா , இராசாசி, காமராசர்-