பக்கம்:தமிழின எழுச்சி.pdf/129

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

128 . தமிழின எழுச்சி

'சந்திரன்' என்றும் எழுதி அல்லது எழுதச் செய்து, நிறைவடைந்து கொள்ளும் தமிழக வரலாற்று எழுத்தாளர்களையும் அவர்களின் பெரு மிதத்தையும் என்னென்றுரைப்பது. அரசு நூல் நிலையங்களிலும், படிப்பகங்களிலும் வந்து குவிகின்ற வெற்று நூல்களையும் பார்த்தால் நாம் கூறுகின்ற உண்மை விளங்கும். நூலக நெறியாளராக ஒருவர் அமர்ந்து கொண்டு, அவர்க்கு வேண்டியவர்களுக்கும், ஈண்டியவர் களுக்கும் ஒன்றுக்குப் பத்தாகவும், வேண்டாதவர்களுக்கும், ஈனாதவர்க் கும் பத்துக்கு ஒன்றாகவும், விலைவைப்பதும், நூல்கள் வாங்கி நிறைப்பதும், அவற்றின்வழித் தம் வீட்டை மாடியாகவும், மாடியை வளமனையாகவும் செய்வதும் அத் தில்லையம்பல நாயகனுக்கே வெளிச்சம்!

இனி, தமிழில் பாடல் நூல்கள் வந்து குவிகின்றன பாருங்கள்! அடடா! அடடா! எழுதியவை எல்லாமும் பாடல்களே! பாட்டிலக்கியம் அதற்கு வேண்டிய பயிற்சி, இலக்கண அறிவு முதலியன எதுவும் தெரியாமல் தமிழில் பாவலனாகலாம்; அதுவும் உலகப் பாவலனாகவும் ஆகலாம். பாவலர் ஒருவரை ஓர் இதழில் இன்னொரு பாவலர் பாராட்டுகின்றார், இப்படி: “புறநானூற்றுப் புலவர்களையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் புலவன் இவன்” என்று! - எப்படி? பாராட்டு! பாராட்டு என்றால் ஒரேயடியாக வானத்திற்குத் தூக்கி வைப்பார்கள்! சீராட்டு என்றால் ஒரேயடியாகக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள், இக்கால எழுத்தாள 'வள்ளல்கள்’! கட்சிக்காரர்களும் அப்படித்தான். ஒரு கட்சியில் பேசிக் கொண்டிருக்கும் மேடைப் பேச்சாளன் இன்னொரு கட்சிக்கு - ஏதோ சூழ்நிலை வயத்தால்- போய்ச் சேர்ந்தால், அந்தக் கட்சி மேடையிலும் ஒரே பேச்சுத்தான்! ஒரே நடைதான்! ஆனால் அப்பேச்சுக்குரிய - அந்த நடைக்குரிய ஆள்கள் அல்லது தலைவர்தாம் மாறுபட்டிருப்பார்கள். பூசை ஒன்றுதான்; படிமங்கள் வேறு! உருப்படியில்லாத ஊர்மாறி ஒருவனை 'உலகத் தமிழர்களின் தலைவன்' என்று ஊளையிடுவான் ஒரு மேடையில்! அடுத்த மேடை மாறியதும், கொடி மாறியதும், உதிரிகளின் சந்து மாறி' என்பான் மறு மேடையில்! எப்படியிருக்கிறது நம் தமிழர்களின் 'இலக்கிய' வரலாறும், அரசியல் 'வரலாறும்'!

இறுதியாக ஒன்று. (இடமில்லாத காரணியத்தால் மிகமிகச் சுருக்கி யெழுத வேண்டி உள்ளது.) திருக்குறள் அறிவில் ஓர் எள்ளின் மூக்கத் துணையும் பெறாத ஒருவர் - திருவள்ளுவர் கடைந்த அறிவுக் கடலின் ஒரு துளி வெண்ணெயும் காணாத ஒருவர் - திருவள்ளுவர் கொண்டைக்குமேல் தம் கொண்டை வளர்ந்துவிட்டதாகத் தருக்கிக்