பக்கம்:தமிழின எழுச்சி.pdf/130

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 129

கொள்ளும் ஒருவர் - திருவள்ளுவரின் கால் செருப்பின் தூசுக்கும் பற்றாத ஒரு 'மேதை' - அவரையும் அவர் குறட்பாக்களையும் 'மூசிய'த்திலே வைக்கச் சொல்லியழுகிறார்! விளங்குகிறதா உங்களுக்கு! 'மூசியம்' என்பது மியூசியம் Museum என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு - அரும்பொருட் காட்சியகத்துக்கு இவர் கண்டுபிடித்த கலைச் சொல்லாம்! - இந்தப் பெரும் (!) பெயராசிரியத் தமிழர்தான் தாம் எழுதிய பாடல்(!)களையும், பாரதிதாசனார் எழுதிய பாடல்களையும் தவிர, பிறர் அனைவருடைய பாடல்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டுமென்று சொன்னாராம்! இவர் பாடல்களையும் அவற்றிலுள்ள கருத்துகளையும் பார்த்தால்தான் தெரியும்!

ஐயோ! தமிழனே! உனக்கு எத்துணைக் கொழுப்பு! திமிர்! எத்துணை வெட்கங்கெட்டுப்போய் நீ உலா வருகின்றாய்! நீ இறுதியில் எங்கே போகப்போகிறாயோ?

தென்மொழி சுவடி-15, ஓலை-12 சூன்-சூலை 1979