பக்கம்:தமிழின எழுச்சி.pdf/136

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 135


குமரிமுனையில், கிழக்குப் பகுதியில் விவேகானந்தர் சிலை அமைந்திருக்கும் பாறையே, அங்குத் தெற்கும் மேற்குமாக அமைந்து உள்ள மூன்று நான்கு பாறைகளிலும் அழகும் அகலமும் உயரமும் வாய்ந்ததாகும். மேலும் அப்பாறையே கடலைவிட்டு அரைக்கல் அளவில் விலகி நாற்புறமும் நீர்சூழ அமைந்த இயற்கையெழில் வாய்ந்த பாறையாகும். அதுவே, நம் தெய்வத் திருவள்ளுவரின் சிலையமைப்பதற்குப் பொருத்தமும், தகுதியும், அமைவும் சூழ்ந்த பாறையாகும், ஏனோ தெரியவில்லை, தமிழரின், வழக்கமான இளிச்சவாய்த் தனத்தினால், அதில் விவேகானந்தர் பாறை அமைய விட்டுக் கொடுக்கப் பெற்றுவிட்டது. விவேகானந்தர் திருவள்ளுவரைவிட எவ்வகையிலும் உயர்ந்தவருமல்லர்; அறிவு நிறைவுற்றவருமல்லர். ஆழ்ந்த மெய்ப்பொருளறிஞருமல்லர். அல்லது ஒரு பொதுமக்கள் தொண்டருமல்லர். சமயச் சார்பான, அதுவும் இந்துமதச் சார்பான தகுதியைக் காட்டிலும் வேறு ஒரு தகுதி அவருக்கிருப்பதாக நாம் கருதவில்லை .

மற்றும், விவேகானந்தர் பாறைக்கு மேற்கே நிலப் பகுதியுள், காந்தியடிகளின் நினைவு மண்டபம் ஒன்று உள்ளது. அதன் முன்னால் ஆதிசங்கரரின் மடம் ஒன்றும், அதையடுத்து வடக்கே வேத பாடசாலை ஒன்றும் அமைந்துள்ளன. அவை தவிர, ஆரிய வளர்ச்சிக்கும் ஆளுமைக்கும் உரிய வகையில், வட நாட்டினரும் இந்து சமயத்தினரும் வேறு இடங்களையும் மடங்களையும் பிடித்துக் கொண்டு, தென்குமரி முனையையே, ஆரிய வல்லாண்மைக்குரிய ஒரு பகுதியாக ஆக்கிக் கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் ஆழ நினைத்துப் பார்க்கையில் தமிழனின் எதிர்காலம் எங்கு இருண்டதாகப் போய்விடுமோ என்ற அச்சந்தான் மனத்தில் எழுகிறது.

ஒருமைப்பாடு என்னும் பெயரில் தமிழ்நாட்டை நடுவணரசு கொஞ்சங் கொஞ்சமாகப் பார்ப்பன ஆளுமைக்கு உட்படுத்தும் செயலே, இந்தியக் குடியரசு நாடாக அமைந்ததிலிருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. மொழி, குமுகாயம், அரசியல், பொருளியல், கலை, பண்பாடு, கல்வி, தொழில் முதலிய அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு படிப்படியாக ஆரிய வல்லாண்மைக் குட்படுத்தப்பட்டு வருவதை உரிமைச் சிந்தனையுள்ள எவரும் மறுக்க முடியாது. இக்கால் குமரிமுனையைப் பார்க்கின்ற பொழுதோ அவ்வெண்ணம் பன்மடங்கு மேலோங்கி நிற்கிறது. வடநாட்டுத் தலைவர்கள் சமயம், அரசியல், தேசியம் என்னும் பெயரால், தமிழக இன மேம்பாட்டுக்குழைத்த தலைவர்களைவிட மேலாகக் கொண்டாடப் பெறுவது கண்கூடாகத் தெரிகிறது. காந்தியின்