எழுச்சிபெறாமல், தமிழரின்
எந்தச் சிக்கலுக்கும் தீர்வு வராது!
தமிழர்க்கு 'இந்திச் சிக்கல்’ நீண்ட நெடுங்காலச் சிக்கல். வேறு எந்த மாநிலமும், தமிழ்நாட்டைப்போல் இந்தித் திணிப்பைப் பெரிதாகக் கருதி எதிர்க்கவில்லை. தமிழர்களே இந்தியைத் தீவிரமாக எதிர்க்கின்றனர். காரணம், இந்தி நுழைவால் இந்தியாவின் பிறமொழிகள் அனைத்தும் வளமும் சிறப்பும் அடையும்; ஆனால் தமிழ் ஒன்றே தாழ்ச்சி பெறும். தமிழ்மொழி தாழ்ந்தால் தமிழனும் கட்டாயம் தாழவே செய்வான். எனவேதான், நம் முன்னாளைய அரசியல், இனவியல், மொழியியல் தலைவர்கள் 'அனைவரும் இந்தியை எதிர்த்தனர்: அதற்காகப் போராடினர். இன்னும் நாம் இந்தியை எதிர்க்கிறோம்: ஆனால் போராடவில்லை . 1965- க்குப்பின் இந்தியை எதிர்த்து எந்தக் கிளர்ச்சியோ, போராட்டமோ, நம்மிடம் எழுச்சி பெறவில்லை. எனவேதான், இந்தி இன்று தொடர்வண்டி நிலையம், அஞ்சல் நிலையம், அரசு அலுவலகங்கள் என்று படிப்படியாகக் கால்வைத்து வந்து, இறுதியில் வானொலி வழியாகவும், தொலைக்காட்சி வழியாகவும் நம் இல்லங்களிலேயே நுழைந்து கூத்தாடுகின்ற அளவுக்கு வந்துவிட்டது. நம் இளைஞர் மனங்களிலும் அது இடம் பிடிக்கின்ற நாள் மிக அண்மையிலேயே வரத்தான் போகிறது.
இனி, தில்லியாட்சியை, அரசியல் அடிப்படையிலேயே வேறு சில மாநிலங்கள் எதிர்க்கின்றன. ஆனால், தமிழ்நாடோ அதை இன அடிப்படையிலும், மொழி, பண்பாட்டு. கலையடிப்படைகளிலும் எதிர்த்து வருகிறது. எனவே, தில்லியாட்சியால், எல்லாரையும் விட,