கருநாடகத் தமிழரின்
காப்பற்ற வாழ்கை நிலை
கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் நாள் கன்னட எழுத்தாளர்கள், கலைஞர்கள் கருத்தரங்கம் ஒன்று வெங்காலூர்(பெங்களூர்) நகரில் கூடியது. அதில் தங்கள் மாநிலத்தில் குடியேறும் அயல் மாநிலத்தவரைக் குறிப்பாகத் தமிழ்நாட்டவரைத் தடுத்து நிறுத்துவது பற்றிக் கருத்துகள் பரிமாறப் பெற்றன.
அதில், பொருளியல், குமுகவியல் மாற்றங்கள் தொடர்பான பயிற்சி நிறுவன இயக்குநர். பர்.கோ. திம்மையா அவர்களும், வெங்காலூர் பல்கலைக்கழகத்தின் அரசியலறிவியல் துறைத் தலைவர் பேரா.கே. எச். செலுவராசு, கன்னட இலக்கியக் கழகத்தலைவரும் முன்னாளைய நகரத்தலைவரும் ஆகிய திரு.கே.கே. நாராயணா ஆகியோரும், மற்றும் இந்திய மேலாளுமைப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் திரு.பர்.ஏ.சண்முகம் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.
அவர்கள் அனைவருமே, வெளிமாநிலங்களிலிருந்து குடியேறும் அயல் மாநிலத்தவர்களிடமிருந்து கருநாடகர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர். அவர்கள் குறிப்பாகத் தமிழர்கள் கருநாடக மாநிலத்தில் வாழ்ந்து வருவதையே சுட்டிக் காட்டிப் பேசினர்.
கன்னடியர்களுக்குக் குடியிருப்பதற்கு வீடுகளும், வாழ்வதற்குப் பணிகளும் கிடைக்காத பொழுது, தமிழர்கள் அங்கு வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களை எவ்வாறேனும் வெளியில்