பக்கம்:தமிழின எழுச்சி.pdf/200

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் . 199


அந்த அளவுக்கு இந்தியெனும் நச்சுக்கொடி நம்மேல் பரந்து படர்ந்து வருகிறது. அவ்வாறு படரவிட்டுள்ளது நடுவணரசு. வானொலியில் முன்னைவிட இந்திமொழி முடுக்கி விடப் பெற்றுள்ளது; தொலைக்காட்சியிலோ சொல்லத் தேவையே இல்லை. மாநில நிகழ்ச்சிகளுக்கு முந்தியே மூன்றிலொரு பங்கு நேரமே ஒதுக்கப் பெற்றுள்ளது. அதிலும் சிலநேரம் சொல்லாமல் கொள்ளாமல் மாநில ஒளிப்பரப்பை நிறுத்திவிட்டு இந்தியரக்கி தன் கால்களை அகட்டிப் பரப்பிக் கொள்கிறாள். இந்தி பேசத் தெரிந்த முட்டாள்கள், மூடர்கள், கூத்தாடிகள், பம்பாய் சிவப்புவிளக்குக் காரிகைகள், அரையுடையும், அம்மணமுமாய் அடிக்கடி தொலைக் காட்சியில் தோன்றி அளப்பு அளப்பு என்று அலப்புகின்ற காட்சிகள் காதுகளைக் கனலச் செய்கின்றன; கண்களைச் சிவப்பாக்குகின்றன; நெஞ்சங்களைப் புண்ணாக்குகின்றன; உயிரைப் பற்றி எரியச் செய்கின்றன. என் செய்வது?

இராமாயணம் என்ன மகாபாரதம் என்ன கட்டி நாடகங்கள் என்ன! தொடர் நாடகங்கள் என்ன! சிறுகதைகள் என்ன! திரைப்படங்கள் என்ன! நாட்டியங்கள் என்ன! தெருக்கூத்துகள் என்ன! விளையாட்டுகள் என்ன! சிறுவர் சிறுமியர் கதைகள், மந்திர தந்திரக் கதைகள், ஆண், பெண் உளறல்கள், வம்பளப்புகள், செய்திகள், பாராளுமன்றப் பேத்தல்கள், தேர்தல் திறனாய்வுகள், உடற்பயிற்ச்சிகள், ஓகங்கள், இருக்கைகள், கோமாளிக் கூத்துகள், விளம்பரங்கள் என்ற வகையில், தெருக்கடைகள், சந்தை சதுக்கங்கள், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், உந்துவண்டி நிலையங்கள், தொடர்வண்டி, வானூர்தி நிலையங்கள், விழாக்கள், வேடிக்கைகள், உழவாண்மைகள், மருத்துவமனைகள், படைத்துறைகள் இன்னோரன்ன பல்வகைக் காட்சிகளில் பல்வேறு கோணங்களில் பல்வேறு வகையான உரையாடல்கள், பாடல்கள், சொலவகங்கள், முதலிய பல்வேறு இலக்கிய, இசை, நாட்டிய, கலை, பண்பாட்டு உத்திகளில் இந்தி! இந்தி! பற்றும் பற்றாததற்கு இராசீவ் முகரையின் வாய் பிளப்பு வேறு! வேங்கட இராமனின் இளித்த வாய்த்தனங்கள்! சோனியாவின் கோணல் நடைக் காட்சிகள் வேறு! இத்தகைய அனைத்துக் காட்சிகளையும் ஒருவன் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பார்ப்பானானால் அவன் எத்தகைய தாய்மொழி நோன்பு நோற்பவனாக இருப்பினும் தானாகவே இந்தி அவன் செவிகளிலேறி, உணர்விலேறி, மண்டையில் ஏறி, அவன் உயிரில் இரண்டறக் கலந்து விடுமளவிற்குக் கரவாக, முரட்டுத்தனமாக, சூழ்ச்சியாக, தேசியம் என்னும் பெயரில் ஒருமைப்பாடு என்னும் உணர்வில் வடமடயர்களால், இந்தி புயல் வேகத்தில், சூறாவளி அழுத்தத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இன்னும் அலுவலகங்கள், போக்குவரத்துகள், படைத்துறை, காவல்துறைகள் முதலிய