பக்கம்:தமிழின எழுச்சி.pdf/201

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

200 • தமிழின எழுச்சி

-வற்றுள்ளும் இந்தி மேலும்மேலும் கொடியுயர்த்தி அரசாண்டு வருவதைத் தமிழ்(இன)க்காவலர் என்று பெரும்பான்மைத் தமிழர்களால் புகழ்பாடப் பெறும் கலைஞர் அறிய மாட்டாரா? இதை விட்டுவிட்டா சாராயக் கடைக்குள்ளும் உணவுப் பங்கீட்டுக் கடைகளுள்ளும் புகுந்து புகுந்து வந்து அரசியல் சித்துகள் விளையாட வேண்டும்? இன்றைய நிலையை நாம் பார்ப்பது அரசியல்! எதிர்கால நிலையை நாம் உணர்வது இனவியல்! இக்கால் கலைஞருக்குக் கிடைத்துள்ள அரசியல் வாய்ப்பை இனவியலுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நம் நோக்கம்! தவிர்க்க முடியாத தேவை!

இனி, இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழீழம் ஓர் இன்றியமையாத கொள்கை, நோக்கம்! தமிழீழம் இல்லாமல் இலங்கைத் தமிழர் வாழவே முடியாது. எத்தனை இராசீவாலும் இலங்கையிலுள்ள இந்தியப் படைவீரர்களாலும் விடுதலைப் போராளிகளுக்கும் சிங்களவர்களுக்கும் ஓர் ஒப்புரவை உண்டாக்கவே முடியாது. மற்றும், தமிழர்களிடத்தில் ஓர் அமைதியை உருவாக்கவே முடியாது. இதுபற்றிக் கலைஞருக்கு மிக நன்றாகவே தெரியும். தமிழீழம் உருவாகாமல் போனால், அங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமன்று, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் என்றும் உரிமைபற்றிப் பேசவே வாய்ப்பில்லாமல் போய்விடும்! அந்த உணர்வையே வடநாட்டு வல்லாண்மையர் அடக்கி ஒடுக்கி விடுவர்! பிறகு தமிழினமே சிறிதுசிறிதாக அழிந்து பட்டு விடும் என்பது அழித்தெழுத முடியாத உண்மையாக இருக்கும்.

எனவே, தமிழீழ அமைப்பு என்பது கலைஞர் போன்ற ஒருவர் காலத்தில்தான் நனவாகிட முடியும். அப்படிப்பட்ட ஒரு தமிழினத்தின் படிநிகராளியாக இனி அரசியலுக்கு வரவே இயலாது; வந்தாலும் துணிவு பெற முடியாது; துணிவு பெற்றாலும் நிலைத்து நிற்க முடியாது. ஆகவே கலைஞர்தாம் இதையும் செய்து முடிக்க முடியும்.

இவ்விடத்தில் அண்மையில் கலைஞர் தமிழீழம் தொடர்பாகக் கையாண்ட ஓர் அணுகு முறையைப்பற்றிச் சுட்டுவது தேவையாகிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழின மேம்பாட்டு உணர்வில் வேறு யாருக்கும் தாழாத நெஞ்சினரும், இராசீவ் கும்பலையே நாடாளுமன்றத்தில், தம் பேச்சு வன்மையாலும், துணிவாலும் மதிகலங்கச் செய்து, திணறடித்துக் கொண்டிருப்பவரும் ஆகிய நம் மதிப்பிற்குரிய வை.கோபால்சாமி அவர்கள், சென்ற பிப்ரவரி இறுதியில் தமிழீழம் சென்று விடுதலை வேங்கை பிரபாகரனைச் சந்தித்து வந்ததைக் கலைஞர், நடுவணரசுக்காக, வெளிப்படையாகத் தகுதிக் குறைவாக மதிப்பிட்டிருக்கத் தேவையில்லை. 'வை.கோபால்சாமி கட்சிக் -