இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
திருவள்ளுவர்
2000-ஆம் ஆண்டில் செய்யத்தக்கன!
(அரசினர் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டு விழா அமைப்புக் கூட்டத்திற்குத் தென்மொழி சார்பில் எழுதி விடுக்கப் பெற்ற கருத்துரைகள் இவை. தென்மொழி அன்பர்கள் அறியவேண்டி இங்கு வெளியிடப் பெற்றுள்ளன)
- திருவள்ளுவர் ஈராயிரமாண்டு நினைவாகத் தமிழகத்தில் உள்ள வடமொழி தாங்கிய ஊர்ப்பெயர்களைத் தனித்தமிழ்ப் பெயராக மாற்றுதல்.
- தமிழர் எல்லாருடைய பெயர்களையும் தனித்தமிழ்ப் பெயர்களாகத் தாங்கும்படி வேண்டுகோள் விடுத்தல்.
- திருவள்ளுவர் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து அதில் உலகத்தின் எல்லா மொழிகளிலும் உள்ள சிறந்த அறநூல்களைப் பயிற்றுவித்து, அக்கல்வியில் தேர்ச்சிபெற்றவர்களையே சமயத் துறைத் தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் ஆக்குதற்கு முயற்சி செய்தல்.
- திருவள்ளுவர் ஈராயிரமாண்டில் நடைபெறும் எல்லா அரசினர் தேர்வுகளிலும் முதலாவதாகத் தேறுவோர்க்குத் திருவள்ளுவரின் வெள்ளிப் படிமமொன்றுடன், ஒரு குறிப்பிட்ட தொகையைப் பரிசாக அளித்தல்.