பக்கம்:தமிழின எழுச்சி.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 35

முதல்தோற்ற நூலாகியதும் ஐத்ரேயர் என்னும் வடமுனிவரால் ஆக்கப் பெற்றதுமான 'ஐத்ரேய சம்ஹிதை' என்னும் நூலுள் தமிழ் மருத்துவத்தில் கொள்ளப்பெறும் உப்பு, கனியம் (உலோகம்) சாரம் (ரசம்), நச்சம் (பாஷாணம்) இவற்றைப்பற்றி, ஒன்றும் கூறப்பெறாததே, ஆரிய மருத்துவத்தின் பின்மையையும், தமிழ் மருத்துவத்தின் முன்மையையும் தனிச்சிறப்பினையும் உணர்த்தும். மேலும் ஆங்கில மருத்துவம் உட்பட உலக மருத்துவ முறைகள் யாவும் தமிழ் மருத்துவத்தின் அடியொற்றியவையே!

தமிழ் மருத்துவ நூல்களுள் மருந்து என்ற ஒரு தனிப்பொருள் எங்குமே குறிக்கப் பெறவில்லை . உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் குறிக்கப்பெற்றுள்ளன. தமிழர் தம் வழிவழி முறையாகப் கொள்ளப்பெறும் உணவுப் பொருள்கள் சான்றோர்களால் தெரிந்தெடுக்கப்பெற்ற மருந்துகளே. அன்றாட உணவுக்காக நாம் பயன்படுத்தும் அரிசி, கம்பு, கேழ்வரகு, சாமை, தினை முதலிய கூல வகைகளும் உப்பு, கொத்துமல்லி, மிளகாய், இஞ்சி, சுக்கு, மிளகு, கடுகு சீரகம் முதலிய மசாலைப் பொருள்களும், கொத்துமல்லிக் கீரை, கறிவேப்பிலை, புதினா முதலிய மணப்பொருள்களும் மருத்துப் பொருள்களே, நாட்டு மருத்துவ முறைகளிலும் பிற நாட்டு மருத்துவ முறைகளிலும் இவ் அடிப்படைப் பொருள்களே பல வகையான வேதியல், விலங்கியல் மாற்றமெய்தி மருந்துகள் என்னும் பெயரில் பலபடக் கையாளப் பெறுகின்றன. தமிழ் மருத்துவ முறையிலோ இவை மூலமாகவும், புதியனவாகவும், நேரிடையாகவும், ஒரு சில மாறுதலுடனும், சிற்சில சிதைவோடும் ஆளப்பெறுகின்றன. மொத்தத்தில் பெயரும் முறையும் மாற்றமேயன்றி பொருள் ஒன்றுதான். மருத்துவத்திலேயே சிறப்புடையது மருந்தன்று; மருந்துதரும் முறையே ஆகும்.

'நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்'

- என்னும் குறளுள் மருத்துவன் மருந்து எனும் ஒரு பொருளை கையாளவேண்டும் என்பதாகக் குறிப்பேயில்லை. வாய் என்பது மருந்தையே குறிப்பதாகாது; மருந்தையும் குறித்ததாகவே கொள்ளுதல் வேண்டும்.

தமிழ் மருத்துவம் எளிதே எங்கும் கிடைக்கும் இயற்கைப் பொருள்களிலும், அவற்றைக் கொள்ளும் முறைகளிலுமே பெரும்பாலும் அடங்கியுள்ளது. சில பொருள்களே கிடைப்பதற் கருமையான பொருள்களாம். நோயின் கடுமை நோக்கின் அவையும் எளிய