பக்கம்:தமிழின எழுச்சி.pdf/44

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 43

ஆறாண்டுகள் மிகவும் நெருங்கிப் பழகியவன் என்ற காரணத்தினாலே ஒரு சில உண்மையான செய்திகளை இங்கு நடைபெறுகின்ற இந்த விழாவையொட்டி வெளிப்படுத்த விரும்புகின்றேன். இஃது எனக்கு மட்டுந்தான் தெரிந்த செய்தி. இன்னொருவர் தெரிந்திருந்திருப்பார்; அவர் இப்பொழுதுமிருக்கிறார். அவர் (பாவேந்தர்) திருக்குறளுக்கு ஓர் உரை எழுதினார். அந்த உரை பிற்காலத்திலே குயில்' இதழில் வெளி யிடப்பெற்றது. அந்தத் திருக்குறளுரை அச்சானது; பதினைந்து படிவங்கள் அச்சாயின; ஒரு படிவம் என்பது பதினாறு பக்கம்; இந்தப் பதினைந்து படிவங்கள் அச்சாகிக் கொண்டிருக்கின்ற பொழுது நான் புதுவையில் இருக்கின்றேன். உரை முழுதும் எழுதிவிட்டார்; உரை இருக்கிறது. அப்படியே; யாரும் அழித்துவிடவில்லை , வெளிவரும். அவரிடத்திலே நான் மிக நெருங்கிப் பேசியவன்; பழகியவன்; கருத்துகளைப் பரிமாறிக் கொண்டவன்; அந்த உரை அச்சாகிக் கொண்டிருந்த தொடக்க நிலையிலே ஒருநாள் மாலையிலே அச்சகத்திற்குப் போனேன். அச்சாகிக் கொண்டிருந்த அந்த ஒரு படிவத்தை எடுத்துப் பார்த்தேன். ஒரு திருக்குறளின் உரை என் கண்ணிலே பட்டது. உடனே அச்சகப் பொறுப்பாளராக அப்பொழுது இருந்த சாமி-பழநியப்பன் என்கின்ற ஒருவர் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; குன்றக்குடி அடிகளாரிடத்திலே செயலாளராக இருப்பவர்; இப்பொழுது இருக்கின்றாரோ என்னவோ, தெரியவில்லை - அன்று அங்கு இருந்தார். அந்த உரையைப் படித்தவுடனே அந்தத் தாளை அப்படியே மேசைமேலே வைத்து விட்டேன்; வைத்துவிட்டு “ஒன்றும் புதியதாகக் காணோமே; பழைய செய்திகளைத்தானே இவரும் திருப்பிச் சொல்லியிருக்கிறார்” என்று சொன்னேன். இந்தக் கருத்தை வேறு யாரும் சொல்லிவிட்டு அங்கு இருந்துவிட முடியாது.

உடனே சாமி-பழநியப்பன், “என்னங்க ஐயா. அப்படிச் சொல்லிவிட்டீர்கள் எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இல்லை; பொதுவாகவே திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை; அதற்கு விலக்கே கிடையாது. அவர் ஆரியச் சார்பான கருத்துகளைச் சிற்சில வாய்ப்பான இடங்களிலே வைத்துப் போய்விட்டார். மற்றபடி சிறந்த உரை அது. அந்தக் கருத்துகளை மட்டும் மறுக்க விரும்புகிறவர் 1330 குறள்களுக்கும் உரையெழுதிக் கொண்டிராமல், எந்தெந்த இடங்களிலே அவர் பரிமேலழகர் உரைக்கோ, அல்லது இதுவரை வந்த உரைகளுக்கோ மறுப்பாக உரையெழுத வேண்டுமோ, அல்லது எந்தெந்த இடங்களில் கருத்து மாறுபடுகின்றதோ அந்தந்த இடங்களில் மட்டுமே விளக்கி, நூறு இடங்களானாலும் சரி, அல்லது இருநூறு குறட்பாக்களுக்கு மட்டுமானாலும் சரி, அவற்றிற்கு மட்டும் உரையெழுதினால்